Breaking News

FACT CHECK: பசி காரணமாக மரணம் அடைந்தவர் என ஷேர் செய்யும் புகைபடத்தின்? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அயோத்தியில் பசி காரணமாக வயதான சாமியார் ஒருவர் உயிரிழந்ததாக ஒரு படத்தை பலரும் ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது




அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


அந்த சம்பவம்  அயோத்தில் உள்ள சரயு நதி கரையோரம் நடந்துள்ளது.

அந்த சாது பெயர் விஷ்னுதாஸ் உடல் நலம் சரியில்லாத தால் அவர் இறந்துள்ளார், மேலும் அவர் இறப்பதற்க்கு முன் தினம் இரவு மழையும்  பெய்துள்ளது. அதனால் குளிரும் ஏற்பட்டுள்ளது அதனால் தான் அவர் இறந்துள்ளார்  என அயோத்தியின்  எஸ்எஸ்பி ஆஷிஷ் திவாரி விளக்கம் அளித்துள்ளார்.


மேலும் சமூக ஊடகங்களில் சாது பசி காரணமாக உயிரிழந்தார் என்று சொல்லபடும்  தகவல் தவறானது மேலும்  80 வயதான விஷ்னுதாஸ் சாது கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இறந்த சாதுவுக்கு மற்றொரு சாது சமாஜ் சார்பில் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. எனவே இது குறித்து யாரும் வதந்தி பரப்பாதீர்கள் என கூறியுள்ளார்

அட்மின் மீடியா ஆதாரம்




எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்




Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback