Breaking News

ஆரோக்கிய சேது ஆப் பாதுகாப்பானது: மத்திய அரசு விளக்கம்

அட்மின் மீடியா
0
கொரானா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆரோக்கிய சேது ஆப்பில்  எந்தபாதுகாப்புக் குறைபாடும் இல்லை என்றும் அந்த ஆப்பில் யாருடைய விவரங்களும் திருடப்பட வாய்ப்பில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது



கொரோனா பரவலைத் தடுக்க, இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் வெளியிடப்பட்ட  ஆப் தான் இந்த ஆரோக்கிய சேது 


கடந்த சிலநாட்களாக ஆரோக்ய சேது ஆப் பாதுகாப்பனது இல்லை என்ற கருத்து நிலவியது இந்நிலையில் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்தும் எந்த பயன்பாட்டாளரின் தனிப்பட்ட விவரங்களும் ஹேக்கர்களால் பாதிப்புக்குள்ளாகாது. நாங்கள் தொடர்ந்து இந்த செயலியை ஆய்வு செய்து பரிசோதித்து வருகிறோம்.அனைவரின் விவரங்களும் பாதுகாப்பாக இருக்கும் என்பதற்கு ஆரோக்கிய சேதுவின் செயலி பாதுகாப்புகுழு உறுதியளிக்கிறது. என்று ஆரோக்கிய சேதுவை நிர்வகிக்கும் குழு தெரிவித்துள்ளது. 


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback