பேஸ்புக்கில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து; அமீரகத்தில் வேலையை இழந்த அடுத்த இந்தியர்
அட்மின் மீடியா
0
அமீரகத்தில் இருந்துகொண்டு இஸ்லாம் மதத்திற்கு எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் வெறுப்பை தூண்டும் அவதூறு பதிவுகளை பதிவு செய்யும் இந்தியர்கள் தொடர்ச்சியாக தங்கள் வேலையை இழந்து வருகின்றனர்.
அந்த வரிசையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மேலும் ஒரு இந்தியரின் பதவி பறிபோயுள்ளது
பீஹார் மாநிலத்தை சேர்ந்த கிஷோர் குப்தா என்பவர் ராசல் கைமாவில் உள்ள ஸ்டீவின் ராக் என்னும் சுரங்க நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். ‘இந்தியாவில் இஸ்லாமியர்களால் தான் கொரோனா பரப்பப்படுகிறது’ என்றும் 50 இஸ்லாமியர்கள் பலியான டெல்லி கலவரத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த செயல் குறித்து சம்பத்தப்பட்ட ஊழியர்களிடம் விசாரணை நடத்திய ‘ஸ்டீவின் ராக்’ நிறுவனம் கிஷோர் குப்தாவை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.
மேலும் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஜீன் பிரான்கோயஸ் மிலியன் கூறியதாவது: சகிப்புத்தன்மை, சமத்துவம் ஆகியவற்றை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு ஊக்குவித்து வருகிறது. இதுகுறித்து, அனைத்து ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எந்த மதம், இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, இதுபோன்ற நடத்தையை நிறுவனம் ஏற்றுக் கொள்ளாது. மீறினால், பதவி நீக்கம் செய்யப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார்.
Tags: முக்கிய அறிவிப்பு வெளிநாட்டு செய்திகள்