புலம் பெயர் தொழிலாளர்களிடம் சொந்த ஊர் செல்ல ரயில், பேருந்து கட்டணம் வசூலிக்ககூடாது:உச்சநீதிமன்றம்
அட்மின் மீடியா
0
கொரானா பரவலை தடுக்க நாடு தழுவிய பொது ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்கள் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாலை வழியாக நடந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது.
இதனால் கடந்த 1-ந்தேதியில் இருந்து மத்திய அரசு சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. ஆனால் ரெயிலில் பயணம் செய்யும் தொழிலாளர்களிடம் பணம் கேட்பதாகவும், சரியாக உணவு வழங்கவில்லை எனவும் புகார் எழுந்தது.
இதற்கிடையில் புலம்பெயர் தொழிலாளர்கள் கஷ்டப்படுவதை கண்ட உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இந்த விசாரணை மேற்கொண்டது.
- பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக ரயில் அல்லது பேருந்துகளை பயன்படுத்தும் போது அவர்களிடம் பயண கட்டணம் வசூலிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் இன்று 28.005.2020 உத்தரவு பிறப்பித்துள்ளது.
- ரயில் பயணத்தின்போது, அவர்களுக்கு உணவு வழங்குவதற்கு ரயில்வே பொறுப்பாகும். எனவும் தெரிவித்துள்ளது.
- போக்குவரத்து வசதிகள் ஏதும் இன்றி நடை பயணம் மேற்கொள்ளும் புலம்பெயர்ந்தோரை அருகிலுள்ள முகாம்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும், அங்கு அவர்கள் கவனிக்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்