ஊரடங்கை படிப்படியாக நீக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் மருத்துவகுழு பரிந்துரை
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் அமலில் உள்ள பொதுமுடக்கத்தை உடனே முழுவதும் நீக்காமல், ஊரடங்கை படிப்படியாக நீக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி அவர்களிடம் மருத்துவர் நிபுணர் குழு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து மக்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பதால் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
பணியிடங்களில் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என முதல்வருடனான ஆலோசனைக்கு பின் ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு