நபி ஸல் கூறியது போல் யூப்ரட்டிஸ் நதி வற்றி அதில் இருந்து தங்கம் எடுக்கும் வீடியோ? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் யூப்ரடீஸ் நதி வற்றிய நிலையில் தங்கப் புதையலை வெளியே தள்ளும். வீடியோ என ஒரு வீடியோவை ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
நாம் இங்கு சொல்வது ஹதீஸ் பற்றியது இல்லை அந்த ஹதீஸ் உண்மையானது ஆனால் அது சம்பந்தமாக பரவும் வீடியோ பொய்யானது.
பலரும் தங்கத்தை சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கிறார்கள் அதனை உருக்கி டிசைன் செய்து விற்பனை செய்கின்றார்கள் என்றே நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. தங்கம் கருப்புக் களி மண்ணில் இருந்துதான் கிடைக்கிறது! அது மண்ணாகவும் அந்த மண்கள் கட்டியாகி மண் படிமங்களாக இருக்கும் மேலும் அந்த மண் கட்டிகளை அப்படி தோய்த்து எடுக்கும் போது தங்கம் மட்டுமே அதில் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
அதில் பல உலோகங்கள் கலந்து இருக்கும் தங்கம், வெள்ளி, மற்றும் துத்த நாகம், இரும்பு, செம்பு, ஈயம் ஆகியவையும் தங்கத்தோடு கலந்து வரும். அதனை சுத்தம் செய்தால்தான் சொக்கத்தங்கம் கிடைக்கும். அதனை பல வகை சுத்தங்கள் செய்து கடைசியாக தங்கம் கிடைக்கும் முதலில் தங்கம் என்பது இதுபோன்று ஆறுகளில் தங்கமாக கிடைக்காது. மேலும் இது போல் பள பள என்றும் இருக்காது
மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ பொய்யானது மேலும் அந்த வீடியோ வை பதிவு செய்தவர் இந்த வீடியோ மட்டுமல்ல இதுபோன்ற பல வீடியோக்களை பதிவு செய்துள்ளார் அவை அனைத்திலும் தங்கம் அங்கே இருக்கிறது இங்கே இருக்கிறது என்பது போன்றவை. தான் யூ டியூப்பில் பணம் சம்பாதிக்க அது போல் வீடியோ வெளியிட்டு வருகின்றார்
இந்த வீடியோக்களுக்கும் நபியின் ஹதீஸிற்க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நபியவர்கள் சொன்னது இறைவன் எப்போது நாடுவானோ அப்பொழுது அது வெளிப்படும். அதுவரை இதுபோன்ற தலைப்புகளில் வீடியோக்களும் செய்திகளும் வந்து கொண்டுதான் இருக்கும்.
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அவரது வீடியோக்கள் பொய்யானது என்றும் அவர் அந்த தங்கத்தை எப்படி தயார் செய்கின்றார் என பாருங்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
பலரும் ஷேர் செய்யும் அசல் வீடியோ
https://www.youtube.com/watch?v=wX7qETEGcCo
அட்மின் மீடியாவின் ஆதாரம்
தங்கம் பற்றிய சந்தேகத்திற்க்கு படியுங்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
மேலும் ஒருவர் அவர் வீடியோ எடுத்த இடத்திற்க்கு சென்று அவர் ஒரு பொய்யர் என்று அந்த இடத்தில் எடுத்த வீடியோ
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி