Breaking News

ஒன்றுக்கு மூன்று மடங்கு விமான டிக்கெட் விலை? எனற வீடியோவின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
ஒன்றுக்கு... மூன்று மடங்கு ஃப்ளைட் டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளது... ஏர் இந்தியா விமானம்... ( *சமூக இடைவெளி பேணுதல் என்று காரணம் கூறி...* ) ஆனால்... உள்ளேயே ஒரு இருக்கை கூட காலியாக இல்லாத.. இந்த நெருக்கடியான நிலை... எதிர்த்து கேட்டால்... எந்த பதிலும் இல்லை... என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையாயும் சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்






அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

பலரும் ஷேர் செய்யும் வீடியோவில் உள்ள சம்பவம்  நடந்தது இத்தியாவில் இல்லை பாகிஸ்தானில்

மேலும் அந்த வீடியோ கடந்த ஏப்ரல் 27 அன்று தி சிட்டிசன் ஆஃப் பாகிஸ்தான் என்ற பேஸ்புக் பக்கத்தின் மூலம் பரப்பப்பட்ட செய்தி . 

வீடியோ விளக்கத்தின்படி, பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) கனடாவின்  டொரொன்டோவிலிருந்து பாக்கிஸ்தான் இஸ்லாமாபாத் வரை  பயணித்த பயணி ஒருவர்  விமான ஊழியர்களிடம்  சமூக இடைவெளி இல்லாமல் அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் உள்ளனர் என்பது சம்மந்தமாக விவாதம் செய்கின்றார் இந்த சம்பவம் இந்திய ஊடகங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய நாட்டினரை ஏற்றி வர ஏர் இந்தியா வழக்கமான கட்டணத்தை விட மூன்று மடங்கு வசூலிக்கப்படுவதாக  ஒரு வீடியோ பொய்யாக பகிரப்பட்டுள்ளது, 

அட்மின் மீடியா ஆதாரம்




அட்மின் மீடியா ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback