காரைக்குடி பைத்துல் மால் சார்பில் பகுதி மக்களுக்கு ரமலான் அன்பளிப்பு
அட்மின் மீடியா
0
காரைக்குடி பைத்துல் மால் சென்டர் சார்பில் 20ம் ஆம் ஆண்டு ரமலான் அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரி வாளாகத்தில் 19.05.2020 நேற்று நடைபெற்றது
அந் நிகழ்விற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சி தலைவர் ஜெ.ஜெயகாந்தன் அவர்கள் தலைமையேற்று ரமலான் அன்பளிப்புகளை இஸ்லாமியர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்க கெளரவ செயலாளர் அல்ஹாஜ். N. முஹம்மது ஹுசைன் அனைவரையும் வரவேற்று அறிமுக உரை நிகழ்த்தினார்.
மேலும் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் அருண் மணி அவர்களும், காரைக்குடி நகராட்சி ஆணையாளர் ரெங்கராஜன் அவர்களும், காரைக்குடி வட்டாச்சியர் பாலாஜி அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதாக மெளலவி. அபுபக்கர் சித்திக் முப்தி அல் குரான் ஓத, மாவட்ட மகளிர் உதவும் சங்க செயற்குழு உறுப்பினர் இனாயத்துல்லாஹ் நிகழ்வினை தொகுத்து வழங்கிட, பைத்துல் மால் சென்டர் செயலாளர் Er.ஹாஜி.ஜமால் ராஜா நன்றியுரை நிகழ்த்திட காரைக்குடி முஸ்லிம் அசோசியேட்டட் டிரஸ்டின் பொருளாளர் லயன் S சையது மற்றும் பைத்துல் மால் நிறுவனர் டாக்டர் கமாலுதீன், பொருளாளர் மகபூப் ஜான், புதுவயல் அன்பால் ஹாஜி முகம்மது மீரா. காரைக்குடி பைத்துல் மால் அறக்கட்டளை நிர்வாகிகளாக கரீம் சாகுல் ஹமீது, S.சீனி முகம்மது, பிஸ்மி சையது இபுறாகீம், M.சிக்கந்தர் நபிவழி நிதி மேலாண்மை திட்ட இயக்குனர் Er M. ஷேக் அப்துல்லாஹ் மற்றும் காரை பஷீர் SR. ஜலீல், M.முகம்மது நஜீப் மாவட்ட மகளிர் உதவும் சங்க செயற்குழு உறுப்பினர் ரஸியாபானு உள்ளிட்ட அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி