Breaking News

ஸ்விஸ் நாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு தன் நாட்டுமக்களுக்கு பிரித்து கொடுத்தாரா நைஜீரிய அதிபர் ? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கலில் பலரும் ஆட்சிக்கு வந்தால் சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு மக்களுக்கு தருவேன் என்ற நைஜீரியா பிரதமர் முகமது புகாரி. சொன்னது போல் ஆட்சிக்கு வந்து சுவிஸ் வங்கியில் முதற்கட்டமாக 2000 கோடி கருப்பு பணத்தை மீட்டு தன் நாட்டு மக்கள் 3 லட்சம் பேருக்கு பகிர்ந்து அளித்துள்ளார். இவர் தான் பிரதமர். சொன்ன வார்த்தையை காப்பாற்றியுள்ளார் என்று  ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டத

கடந்த 2015-ல் நைஜீரியாவில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிப் பெற்று முகமது புகாரி அதிபரானார்.  அவர் அதற்க்கு முந்தைய அரசின் ஆட்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் கோடிக்கணக்கான பணத்தை ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளார்கள் என்றும்  தேர்தல் வாக்குறுதியாக நாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மீட்க உள்ளதாக அறிவித்தார் அதில் நைஜீரியாவின் ஊழல் நிறைந்த முன்னாள் தலைவர் சனி அபசாக்கு சொந்தமாக சுவிஸ்-ல் இருக்கும் 320 மில்லியன் டாலரை திரும்ப கொண்டு வர உலக வங்கியின் உதவியை நாடினார். 

மேலும் தன் நட்பு நாடுகளின் உதவியுடன் சுவிஸ் நாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்க ஒப்பந்தங்கள் போடப்பட்டு மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டார் நைஜீரிய அதிபர் முகமது புகாரி 


அந்த நடவடிக்கைக்கு பலனாக முதல்கட்டமாக கடந்த 2018 ம் ஆண்டு மே மாதம், 1.2 பில்லியன் டாலர்களை தருவதாக உறுதி அளித்துள்ளது. 

மேலும் நைஜீரிய அரசு  நாட்டின் திருடப்பட்ட சொத்துக்களை மீட்டு கொண்டு வரும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது  மீண்டும் கடந்த 03.02.2020 அன்றும் ஓர் முத்தரப்பு ஒப்பந்தம் போடபட்டு மீதம் உள்ள  $311,797,876  கடந்த 06.05.2020 அன்று அமெரிக்கா பெற்று கொடுத்துள்லது


அவர் அந்த பணத்தை தன் நாட்டு பொருளாதாரத்தையும் நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்க்கு உதவும் என்று தெரிகின்றது 


அட்மின் மீடியாவின் ஆதாரம்






Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback