Breaking News

குடியரசுத் தலைவர் விருது 2020 விண்ணப்ப பட்டியலில் தமிழ் மொழி புறக்கணிப்பா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  மத்திய அரசு 09/05/2020  தேதியிட்டு வெளியிட்ட செம்மொழிக்கான விருதுகள் வழங்கும் திட்ட அறிவிப்பில் தமிழ் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது . என்று  ஒரு  செய்தியினை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

கடந்த 2004ம் ஆண்டு தமிழ்மொழி  செம்மொழி அந்தஸ்து பெற்றது. அதன் அடிப்படையில் தமிழ் மொழிக்கென தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 2008ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 

அன்று முதல் செம்மொழி தமிழ்ப் புலமை விருதுகளை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்தான் அறிவித்து தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று தேர்வு செய்து . அதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்குவார்.  

ஆனால் மற்ற  மொழிகளுக்கு செம்மொழியான தமிழ் மொழிக்கு இருப்பது போல் தன்னாட்சி அங்கீகாரம் எதுவும் தரப்படவில்லை ஆகையால் அந்த மொழிகளில்  மத்திய அரசே நேரடியாக விண்ணப்பங்களை வரவேற்று குடியரசுத் தலைவர் மூலமாக விருது வழங்குகிறது.

இது தெரியாமல் பலரும் அந்த  விளம்பர அறிவிக்கையில் தமிழ் பற்றி  குறிப்பிடவில்லை என ஷேர் செய்கின்றார்கள்

இந்த செய்தி பிரச்சனை பற்றி சமூகவலைதளங்களில் பலரும் விவாதிக்க தமிழ்க அரசும் இத்ற்க்கு விள்க்கம் அளித்துள்ளது


அட்மின் மீடியாவின் ஆதாரம்



Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback