ஆம்பன் புயல்: அந்தமான் அருகே வங்கக் கடலில் 16ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு- சென்னை வானிலை மையம்
அட்மின் மீடியா
0
அந்தமானில் மே 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது.
மேலும் மே 15ம் தேதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி மத்திய வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும். பின்னர் மேலும் வலுப்பெற்று அந்தமானில் மே 16ம் தேதி புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது.
புயல் உருவாக வாய்ப்பு இருப்பதால் வரும் 15,16 மற்றும் 17ம் தேதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதிக்குகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tags: முக்கிய அறிவிப்பு