அவரவர் பள்ளியிலேயே 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு
அட்மின் மீடியா
0
கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை காரணமாக கடந்த மார்ச் 27ம் தேதி நடத்தப்படவிருந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஜூன், 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு தேர்வு நடைபெறும் என்று அறிவித்தார் அதனை எதிர்த்து வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 ம் வகுப்பு பொது தேர்வை தற்போது நடத்தகூடாது என பொது நலவழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அநத வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது அந்த வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது
இந்நிலையில் கொரோனா தொற்றை தடுக்க சமூக இடைவெளியுடன் தேர்வை நடத்த தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே எழுதவும் பொதுத் தேர்வை மாணவர்கள் அவரவர் பள்ளியிலேயே எழுதவும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு