Breaking News

FACT CHECK எங்களுக்கு காஷ்மீர் வேண்டாம் :கொரானா மருந்து கொடுங்கள் என பாகிஸ்தான் இளைஞர்கள் கொடி பிடித்தார்களா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில்  பாகிஸ்தான் இளைஞர்கள் காஷ்மீர் வேண்டாம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை கொடுங்கள் என்று இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து கொடி பிடித்துள்ள புகைபடத்தை பலரும் ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உணமையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மைஎன்ன


இந்த புகைப்படம் போட்டோ ஷாப் செய்யப்படடது 

மேலும் இதே போல் பலதடவை அந்த புகைப்படம் போட்டோஷாப் மூலம் சமூகவலைதளங்களில் பகிரபட்டு வருகின்றது குறிப்பிடதக்கது

கடந்த 2018 ம் ஆண்டு எங்களுக்கு காஷ்மீர் வேண்டாம் விராட் கோலி வேண்டும் என இதே புகைப்படம் வைரலானது


அப்படியானால் அந்த உண்மையான புகைப்படம் எப்போது எங்கு எடுக்கப்பட்டது

அந்த அசல் புகைப்படம் 2016 ம் ஆண்டு எடுக்கபட்டுள்ளது



அந்த அசல் புகைபடத்தில்  பாகிஸ்தான் கொடி பின்னணியில் வீ வாண்ட் ஆசாதி என்று எழுதப்பட்டு இருந்தது.ஆசாதி என்றால் விடுதலை என்று அர்த்தம் காஷ்மீரில் எடுக்கபட்ட புகைபடத்தை போட்டோஷாப் செய்து பொய்யாக பரப்புகின்றார்கள். 

அட்மின் மீடியா ஆதாரம் 1
அசல் புகைப்பட ஆதாரம்

https://www.indiatoday.in/india/story/kashmir-unrest-youth-raise-pro-pakistan-slogans-burhan-wani-333919-2016-08-08

அட்மின் மீடியா ஆதாரம் 2
2018 ம் ஆண்டு விராட் கோலி புகைபட ஆதாரம்
https://www.deccanchronicle.com/sports/cricket/190619/we-dont-want-kashmir-give-us-virat-kohli-altered-image-goes-viral.html


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback