Breaking News

FACT CHECK காவலரை கொரோனா தாக்கிய வீடியோவா ?| உண்மை என்ன ? வதந்தி பரப்பாதீர்கள்

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  காவலர் ஒருவருக்கு கொரோனா தாக்கிய கொடூரம் பார்ப்பதற்கே நெஞ்சு பதறுகிறது. இறைவன் பாதுகாக்க வேண்டும். என்று ஒரு வீடியோவை  பலரும் ஷேர் செய்கின்றார்கள்




அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அந்த சம்பவம்  பீகாரின் ஹாஜிப்பூர் சிறையில்  நடத்தப்பட்ட ஒரு ஒத்திகை வீடியோவாகும். 

ஆனால் சமூக வலை தளங்களில் ஒரு கொரோனா  தொற்றுள்ள போலீஸ்காரர் ஒருவரை காட்டும் ஒரு உண்மை சம்பவம் என போலியாக பகிரப்பட்டுள்ளது.

ஒரு ஒத்திகை வீடியோவை பல்வேறு தலைப்புகளில் சமூக வலைத்தளங்களில் பரப்பி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளார்கள்.




எனவே நீங்களும் இதுபோன்ற வீடியோக்களை அதன் உண்மைத் தன்மை தெரியாமல் பார்வேர்ட் செய்ய வேண்டாம் உண்மைத்தன்மை தெரிய நீங்கள் எங்களுடன் இணைந்திருங்கள் 

அட்மின் மீடியாவின் ஆதாரம் 1



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback