தமிழகத்தை சேர்ந்த முஸ்தபா டெல்லியில் மரணம்: டெல்லியில் தனிமைப்படுத்துதல் முகாமிலிருந்தவர் மரணம்.
அட்மின் மீடியா
0
டெல்லியில் நேற்று 22.04.2020 தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர் முஸ்தபா மரணமடைந்துள்ளார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் இவர் தமிழக அரசின் சிப்காட் நிறுவனத்தில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றவர் ஆவார்
டெல்லியில் நடைபெற்ற தப்லீக் கூட்டத்திற்குச் சென்றிருந்த பலர் தமிழகம் வந்துவிட்ட நிலையில் சுமார் 400 க்கும் மேற்பட்டவர்கள் ஊரடங்கினால் அங்கேயே முடங்கவேண்டியதாயிற்று இந்நிலையில் அவர்கள் டெல்லியில் பல்வேறு இடங்களில் தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள்
அவர்களுக்கு இரு முறை கொரோனா நோய் பரிசோதனை நடைபெற்றது. கொரோனா தொற்று இல்லை என்று சோதனை முடிவுகள் தெரிவித்தன இருந்தும் அவர்களை தமிழகத்திற்க்கு அனுப்ப எந்த வித நடவடிக்கையும் இதுவரை டெல்லி அரசாங்கம் எடுக்கவில்லை
இந்நிலையில் கடந்த 19ம் தேதியன்று ஜமா அத்துல் உலமா சபையும் தமிழக அரசுக்கு டெல்லியில் சுமார் 400க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொரானா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்தும் தமிழகம் வர போக்குவரத்து வசதியில்லாமல் இருக்கின்றார்கள் உடனடியாக தமிழக அரசு தலையிட்டு அவர்கள் தமிழகம் வர தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தது
மேலும் படிக்க: ஜமா அத்துல் உலமா கோரிக்கை படிக்க
இந்நிலையில் டெல்லி சுல்தான்பூர் பகுதியில் உள்ள தனிமைப்படுத்துதல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த தமிழகத்தின் கோயம்புத்தூரை சேர்ந்த முஸ்தபா மரணமடைந்துள்ளார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .இவருக்கு கொரானா இல்லை ,ஆனால் உடல் நலகுறைவால் மரணம் ஏற்பட்டுள்ளது
மேலும் பல தனிமை படுத்தபட்ட முகாமில் பலர் தங்க வைக்கபட்டுள்ளார்கள் அந்த முகாமில் அவர்களுக்கு சரிவர உண்ண உணவு இல்லை, வயதானவர்களுக்கு மருத்துவ வசதி இல்லை, என்றும் சரியான அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது
எனவே தனிமைப்படுத்துதல் முகாமில் உள்ளவர்களை தமிழகத்திற்கு அழைத்து வரத் தமிழக முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அட்மின் மீடியா கேட்டுக் கொள்கிறது
Tags: மார்க்க செய்தி