Breaking News

FACT CHECK சாலையில் ரூபாய் நோட்டு மூலம் கொரனா பரப்புகின்றார்களா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்   சாலைகளில் கீழே கிடக்கும் பணங்களையோ அல்லது நாணயங்களையோ  எடுத்து விடாதீர்கள் முஸ்லிம்கள் கொரோனா  வைரஸை  பரப்புவதற்காக விசியிருக்கிறார்கள் ஏனென்றால் இதை  யாராலும் கண்டுபிடிக்க முடியாது எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்று  ஒரு வீடியோவை  பலரும் ஷேர் செய்கின்றார்கள்



அந்த வீடியோவில் சாலையில் கீழே இருக்கும் ரூபாய் நோட்டுகளை காவலர்கள் அதனை பாதுகாப்பாக குச்சி வைத்து எடுத்து கவரில் போட்டு எடுக்கும் காட்சியாக அந்த வீடியோ இருக்கும் 


அந்த வீடியோவின்  உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்வதைப்போல எங்கு எந்த சம்பவம் நடந்தாலும் உடனே அதை முஸ்லிம்கள் தான் செய்தார்கள் .இதன் மூலம் கொரோனாவை  பரப்புகிறார்கள் என்று சில சமூக விரோதிகள் மத துவேஷத்தை பரப்புவதற்காக செய்து கொண்டிருக்கிறார்கள். நாமும் அதைப் புரியாமல் அதன் உண்மைத் தன்மை தெரியாமல் ஃபார்வர்டு செய்துவிடுகிறோம் . சரி விஷயத்திற்க்கு வருவோம் 



உண்மை என்னவென்றால் அந்த சம்பவம் நடந்தது மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் நடந்தது.

ராம் நரேஷ் யாதவ் என்பவர் அந்த பகுதியில் சிலிண்டர் டெலவரி செய்பவர் ஆவார் அவர் டெலவரி செய்து கொண்டிருந்த போது அந்த பகுதியில் அவருக்கு தெரியாமல் அந்த பணம் கீழே விழுந்துவிட்டது


அது தெரியாமல் அந்த பகுதியில் சிறுது நேரம் பரபரப்பானது. மீடியாக்களும் செய்தி வெளியிட காவலர்கள் வந்து மொத்தம் ரூபாய் 6480 பணத்தை கைபற்றினார்கள்.

மேலும் மறு நாள் இந்தப் பணம் என்னுடையது தான் என்று கூறி அந்த பணத்தை  காவல்துறையினரிடம்  கூறி பெற்று சென்றுள்ளார். என அட்மின் மீடியா போல் வடமாநிலத்தில் பிரபலமாக உள்ள boomlive செய்தி வெளியிட்டுள்ளது  


அட்மின் மீடியாவின் ஆதாரம்



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback