Breaking News

ஊரடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கு பெற்ற கர்நாடக தேர் திருவிழா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
இதுதான் லாக்டவுனா? கர்நாடகாவில் தேரை இழுத்த ஆயிரக்கணக்கான மக்கள்! வேடிக்கை பார்த்த பாஜக போலீஸ். ஊரடங்கு நேரத்திலும் கர்நாடகா மாநிலம் கல்புராகி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற தேர் திருவிழா நடந்தது  என ஒரு பதிவை பலரும்  சமூக வலை தளங்களில் ஷேர் செய்கின்றார்கள் 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி உண்மையானது தான் ஆனால்


கர்நாடக மாநிலம் குல்பர்கா எனப்படும் கல்புராகி மாவட்டத்தில் உள்ள சித்தலிங்கேஸ்வரர் கோவில் தேர் திருவிழா 2020 ஏப்ரல் 16ம் தேதி நடந்துள்ளது ஆனால் அந்த தேர்திருவிழாவில்  நூற்றுக் கணக்காண மக்கள் மட்டுமே பங்கேற்றுள்ளார்கள்

மேலும் இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி வெளியே தெரிந்தவுடன் அந்த பகுதி  போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த விஜயகுமார் பவாகி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  

ஊரடங்கில் திருவிழாவை நடத்திய கோவில் நிர்வாகம் மீதும் மற்றும் 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  வீடியோவில் உள்ள நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது


இந்த சம்பவம் குறித்து காவல்துறை சார்பில் வழக்கமாக நடைபெறும் திருவிழா கொரோனா பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுவிட்டது அனாலும்  சிறப்பு பூஜைகள் மட்டும் செய்ய கோவில் நிர்வாகம் தரப்பில் அனுமதி பெறப்பட்டது. காலையில் 6 மணி அளவில் போலீசார் ஷிப்ட் மாறுதல் நடைபெறும் நேரத்தில் அவசர அவசரமாக தேர் திருவிழாவை கோவில் நிர்வாகம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.  என விளக்கம் அளித்துளார்கள்


ஆனால் சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்யும் இந்த சம்பவம் குறித்து வெளியான புகைப்படத்தால் தான் இந்த செய்தி வைரல் ஆகியுள்ளது

பலரும் இந்த செய்தி சம்பந்தமாக  பழைய புகைபடத்தை ஷேர் செய்து வருகின்றார்கள் உண்மை என்னவென்றால் கடந்த 2017ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோப்பல் மாவட்டத்தில் உள்ள கவிசித்தேஷ்வரா கும்பமேலாவில் 
எடுக்கபட்ட புகைபடம் என செய்தி கிடைத்தது



அட்மின் மீடியா ஆதாரம் 1
தற்போது நடந்த தேர் திருவிழா வீடியோ பார்க்க



அட்மின் மீடியா ஆதாரம் 2
ஊரடங்கை மீறி நடந்த இந்த தேர் திருவிழா சம்பதாக வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது என செய்தி

அட்மின் மீடியா ஆதாரம் 3
பலரும் ஷேர் செய்யும் புகைப்படம் 2017 ம் ஆண்டு எடுக்கபட்டது




எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback