Breaking News

சலூன் கடைகள் திறக்கலாம் என்ற செய்தி உண்மையா? காவல்துறை விளக்கம்

அட்மின் மீடியா
0
நேற்றுமுதல் சமூக வலைதளங்களில் பலரும் சலூன் கடைகளை காலை 7 மணி முதல் 10 மணி வரையில் திறந்து வைக்க அரசு அனுமதி அளித்து உள்ளதாக ஷேர் செய்து வருகின்றார்கள் 

அந்த செய்தியின் உண்மை என்ன அட்மின் மீடியா களம் கண்டது





அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

கொரானா வைரஸ் பரவலை கட்டுபடுத்த கடந்த 24.03.2020 முதல் ஏப்ரல்  14-ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


அத்யாவசிய  தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும் எனவும்  மருந்தகங்கள் மட்டுமே வழக்கம் போல் திறக்கவும் காய்கறிகடை, பால்கடை, மளிகைகடை, கறிகடை போன்றவைகள் காலை 6 மணிமுதல் மதியம் 2:30 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டது


இந்நிலையில்,நேற்று முதல்  சலூன் கடைகளை காலை 7 மணி முதல் 10 மணி வரையில் திறந்து வைக்க அரசு அனுமதி அளித்து உள்ளதாக செய்திகளில் வெளியான தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த செய்தி பொய்யானது என தமிழக காவல் துறை மறுத்து செய்தி வெளியிட்டுள்ளது




எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback