Breaking News

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றினரா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்   கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் இந்திய பிரதமர் அவர்களின் முடிவுக்கு இணங்க அவர் வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றினார் என்று  ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்கின்றார்கள்




அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன




கேரள முதல்வர் பினராய விஜயன் அவர்களின்  அந்த மெழுகுவர்த்தி புகைப்படம் 2018 ஆம் ஆண்டு நடந்தது

அந்த புகைப்படம் புவி மணி (Earth Hour) என்பதற்க்காக எடுக்கபட்டது

புவி மணி (Earth Hour) என்றால் வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், தேவை இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வாகும். ஆண்டுதோறும் மார்ச்சில் கடைபிடிக்கும் நிகழ்வாகும்

அப்படி 2018 ம் ஆண்டு கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் வீட்டில் இருந்த போது எடுக்கபட்ட போது எடுத்தபுகைப்படம் ஆகும் 

அப்படி எடுக்கபட்ட அந்த போட்டோவை எடுத்து தவறான தலைப்புகளில் வதந்திகள் ஆக பரப்பப்படுகிறது 


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


அட்மின் மீடியாவின் ஆதாரம்

earth hour என்றால் என்ன 



அட்மின் மீடியாவின் ஆதாரம்

இந்த செய்தி பற்றி மலையாள செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி




Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback