Breaking News

FACT CHECK: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்து விட்டார் என ஷேர் செய்யப்படும் செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் உடல்நலக் குறைவு காரணமாக மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும்  அவரின் உடலை அடக்கம் செய்யும் காட்சி என ஓர் புகைப்படம் பலராலும் ஷேர் செய்யபடுகின்றது



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன



கடந்த ஒரு வாரமாகவே சமூக வலைதளங்களில் வட கொரிய அதிபர் குறித்து தான் பல வதந்தி பதிவுகள் வலம் வருகின்றது

கடந்த வாரம் அவர் மூளை சாவு அடைந்து விட்டார் என பரப்பினார்கள் ஆனால் அதனை அந்நாட்டு அரசு மறுத்தது 


இந்நிலையில் தற்போது கிம் ஜாங் உன் இறந்து விட்டதாகவும் இது தான் அவரது உடல் என்று ஒரு போட்டாஷ்ஹ்ப் புகைபடத்தை ஷேர் செய்கின்றார்கள்

ஆம் அந்த புகைப்படம் போட்டோ ஷாப் புகைபடமாகும்

 2012-ம் ஆண்டில் வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல் அவர்கள் உயிரிழந்த பிறகு அவரின் உடல் காட்சிப்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை போட்டோ ஷாப் செய்து  ஷேர் செய்து செய்து வருகிறார்கள். 

மேலும்  அவர் இறந்துவிட்டார் என அவரது இறுதி ஊர்வலம் என ஒரு வீடியோவை ஷேர் செய்கின்றார்கள்

அந்த வீடியோ 8 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை இறந்து போன போது இறுதி ஊர்வலத்தில் எடுக்கபட்ட வீடியோ  அது

அட்மின் மீடியா ஆதாரம்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback