Breaking News

மஹாராஷ்ட்ராவில் 3 இந்து சாமியார்களை முஸ்லீம்கள் அடித்து கொன்றார்களா

அட்மின் மீடியா
0
சமூக வலைதளங்களில் பலரும் மஹாராஷ்ட்ராவில் 3 இந்து சாமியார்களை அடித்து கொன்ற முஸ்லீம்கள் என ஒரு செய்தியுடன் ஓர் வீடியோவையும் ஷேர் செய்து வருகின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அந்த வீடியோ சம்பவம் மஹாராஷ்ட்ராவில்  நடந்தது


மேலும் அந்த சம்பவம் கடந்த 16.04.2020 அன்று நடந்தது


மகாராஷ்டிராவின் உள்ள பால்கர் மாவட்டத்தில் உள்ள Gadchinchle village என்ற கிராம பகுதியில் குழந்தைகளின் உடல் உறுப்புகளை திருடும் கும்பல் என பரவிய வதந்தியால் அந்த பக்கமாக காரில் உறவினரின் இறப்புக்கு சென்று கொண்டு இருந்த   3 பேரை அக்கிராம மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் தாக்கியுள்ளார்கள்

தகவல் அறிந்த போலிஸார் வந்தும் அக்கும்பலை கட்டுபடுத்தமுடியவில்லை  அவர்கள் தாக்கியதில் காரில் வந்த 3 நபர்கள் இறந்துள்ளார்கள். 

இது சம்மந்தமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளார்கள் மேலும் 110 நபர்களை கைது செய்துள்ளார்கள் என அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கின்றன


கள தகவல் இப்படி இருக்க  இறந்து போன நபர்களை அடித்தது முஸ்லீம் தான் என்று சமூக வலைதலங்களில் வதந்தி பரப்புகின்றார்கள்



அட்மின் மீடியா ஆதாரம் 1
 இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதல்வர் தனது டிவிட்டர் பதிவில்
அட்மின் மீடியா ஆதாரம் 2



எனவே யாரும் பொய்யான் செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback