Breaking News

ஜுன் 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0
உலகம் முழுவதையும் கொரோனா பரவலை தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது அந்த வகையில் இந்தியாவில்  கடந்த மாதம் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.


இந்நிலையில் தெலுங்கானாவில் ஊரடங்கு நீட்டிப்பு செய்வதாகவும் ஏப்.14-ம் தேதி முதல் ஜுன் 3 வரை வரை அமலில் இருக்கும் என முதல்வர் அறிவித்துள்லார் என ஒரு செய்தி சமூக வலைதளங்களிலும் மீடியாக்களிலும் அறிவிப்பு வெளியானது. 




இதற்கு தெலுங்கானா முதல்வர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் 2 வாரங்களுக்கு, மட்டுமே நீட்டிக்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. முதல்வர் சந்திரசேகர ராவ் ஊரடங்கை நீடிக்குமாறு கோரிக்கை மட்டுமே வைத்துள்ளார். பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் மீண்டும் சரிகட்டிவிடலாம், ஆனால் மக்களின் உயிரை காப்பாற்றி ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளார்கள் எனவே பொய்யான செய்தியினை நம்பாதீர்கள்





Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback