Breaking News

மே 3 ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிப்பு பிரதமர் மோடி நேரலை.......

அட்மின் மீடியா
0
பிரதமர் நரேந்திர மோடி இன்று 14.04.2020 காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார். அதில் மே 3 ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிப்பு


பிரதமர் மோடி உரை லைவ் அப்டேட்

பாரத பிரதமர் மோடி அவர்கள் கொரானாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம் மக்களின் ஒத்துழைப்பால் கொரானாவை கட்டுப்படுத்த முடிந்தது மேலும் கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம் அதேசமயம் மக்களின் சிரமங்களை நான் உணர்ந்துள்ளேன் ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டதை என்னால் உணர முடிகிறது கொரானாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் போன்று செயல்பட்டு வருகின்றனர் மக்களின் ஒத்துழைப்பால் கொரானாவை கட்டுப்படுத்த முடிந்தது மக்களின் தியாகம் கொரோனாவுக்கு எதிரான போரில் பெரும் உதவியாக உள்ளது கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா வெற்றிபெறும் என்று கூறிய பாரத பிரமர் மோடி அவர்கள்  மேலும் 





டாக்டர் அம்பேத்கர் கடினமான சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்வது என்பதை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளார். தற்பொழுதைய கடினமான சூழ்நிலைகளையும் அவ்வாறே நாம் சமாளிப்போம் என்று கூறினார் மேலும் மக்கள்  வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் ,  அத்தியாவசிய தேவைக்கு வெளியே வந்தால் தனிமனித இடைவெளி அவசியமாக பின்பற்றவேண்டும் எனவும் ஊரடங்கு காலத்திலும் மக்கள் தொடர்ந்து கட்டுப்பாடுடன் விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என கூறிய பிரதமர் மோடி அவர்கள்

வீட்டை விட்டு வெளியே பொதுவெளியில் ஏதாவது ஒரு முக கவசத்தை  அணிந்து வருவது கட்டாயமாக இருக்க வேண்டும் எனவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் மேலும் ஆரோக்கிய சேது செயலியை மக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் எனகூறினார்.

கொரானா  அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது தற்போதைய சூழலில் ஊரடங்கு நீட்டிப்பும் . கட்டுப்பாடுகளும் அவசியமாகிறது எனவே மே மாதம் 3 ம்தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கபடுகின்றது என அறிவித்துள்ளார்

மேலும் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றபடும் எனவும் அனைத்து இடங்களும் கண்காணிக்கப்படும் என கூறிய மோடி அவர்கள் ஏப்ரல் 20ம் தேதிக்குப் பிறகு கொரோனா வைரஸ் பாதிப்பு வராத இடங்கள், போன்றவற்றை கவனித்து, அந்தந்த மாநில அரசுகள் ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்தி, முக்கியமான பணிகளை மறுபடியும் துவங்க அனுமதி அளிக்கலாம் என கூறினார்

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback