Breaking News

மெக்கா அருகில் எரியும் நீர் இறுதி நாளின் அடையாளம் என ஷேர் செய்யபடும் செய்தியின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
சவுதி அரேபியாவில் மக்கா நகருக்கு அருகில் நெருப்பும் நீரும் ஒன்றாக இருக்கின்றது  இது அழிவுக்கு அருகில் நடக்கும்.அது குர்ஆன் கூறுகிறது. கியாமத்நாளின் அடையாளம்  கவனமாக இருங்கள்.என 



ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையாயும் சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம் 

அப்படியானால் உண்மை என்ன

இந்த சம்பவம் 2016ம் ஆண்டு முதல் சமூகவளைதளத்தில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள் அதில் பலரும் சவுதி என்றும் குவைத் என்றும் ,துபாய் என்றும், ஈரான் என்றும் மெக்கா என்றும் பரப்புகின்றார்கள்


ஆனால் இந்த சம்பவ வீடியோ நடந்த  இடம் ஈரான் - ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியாகும் சவுதி அரேபியாவில் மக்கா நகருக்கு அருகில் என்பதே பொய்யானது ஆகும்

மேலும் அந்த குடிநீர் பைப்பில் பெட்ரோலியம் கேஸ் கலந்து உள்ளதால் அது போல் நிகழ்துள்ளது

மேலும் இது போன்ற  எரியும்  நீரூற்று  புதிய நிகழ்வு அல்ல. மேலும் இது கியாமத் நாளின் அடையாளமும் அல்ல

தைவானின் குவான்சிலிங்கிலும் இதேபோன்ற ஒரு நீரூற்று உள்ளது, அதில் இருக்கும்  தண்ணீரில் அதிக அளவு கந்தக சல்பர் கலந்து இருப்பதால்   வெளியேறும் போது தீப்பற்றி எரிகிறது

ஜமைக்காவில்  ஒரு நீர்க் குளமும் உள்ளது அதில் மீத்தேன் அதிக அளவு இருப்பதால் அது போல் எரிந்து கொண்டு இருக்கின்றது 

மக்காவில் நீரும் நெருப்பும் ஒன்றாக உள்ளது   இது குர்ஆனில் எழுதப்பட்டுள்ளது, உலகின் முடிவின் அறிகுறிகளில் என்பது எல்லாம்  தவறானது 


அட்மின் மீடியா ஆதாரம்

ஜமைக்காவில் உள்ள எரியும் குளம் 

https://www.youtube.com/watch?v=hFDdpYbAjC0


அட்மின் மீடியா ஆதாரம்

ஈராக்கில் அதே போல் எரியும் நீர் 

https://www.youtube.com/watch?v=DBfDqDLZFTI


அதேபோன்ற் ஒரு நிகழ்வு இந்தியாவில் கோதாவரி ஆற்றிலும் நிகழ்ந்தது


அட்மின் மீடியா ஆதாரம்


https://www.islamicteachings.org/forum/topic/23227-viral-video-on-a-stream-emitting-fire-and-water/

அட்மின் மீடியா ஆதாரம்


தைவான் நாட்டில் உள்ள எரியும் நீருற்று 



இது போல் பல உள்ளது எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback