கொரோனா குறித்து தவறான வீடியோ வெளியிட்ட ரஜினி: அதிரடியாக வீடியோவை நீக்கியது ட்விட்டர்!!
அட்மின் மீடியா
0
கொரோனாவை தடுக்க சுய ஊரடங்கை ஆதரித்து ரஜினி வெளியிட்ட வீடியோவை ட்விட்டர் நிர்வாகம் அதிரடியாக நீக்கியுள்ளது.
கொரோனா தடுப்பு முயற்சியின் ஒரு பகுதியாக இன்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு நடைபெற்று வருகின்றது இதனை வரவேற்று நடிகர் ரஜினிகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை நேற்று வெளியிட்டுள்ளார்.
அதில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது கட்டத்தில் இருக்கிறது. அது மூன்றாவது கட்டத்திற்கு போய்விடக்கூடாது. ஜனங்கள் நடமாடுகின்ற இடங்களில் உள்ள கொரோனா வைரஸ் 12 இல் இருந்து 14 மணிநேரம் அது பரவாமல் இருந்தாலே அதை மூன்றாவது கட்டத்திற்குப் போகவிடாமல் தடுத்துவிடலாம். அதற்காகதான் பிரதமர் மோடி அவர்கள் 14 மணிநேர சுய ஊரடங்கு உத்தரவு கொடுத்துள்ளார்கள் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் கூறியது பொய்யானது என அவரது ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது. 14 மணி நேரம் வரை பரவாமல் இருந்தால் 3வது நிலையை தவிர்க்கலாம் என ரஜினி கூறியிருந்தார். இது தங்களது விதிமுறைக்கு எதிரானது எனக்கூறி ட்விட்டர் நிறுவனம் ரஜினி வீடியோவை நீக்கியுள்ளது.
Tags: முக்கிய அறிவிப்பு