Breaking News

டெல்லி நிஜாமுதீனில் நடந்தது என்ன ? தப்லிக் ஜமாத் தலைமையகம் விளக்கம்

அட்மின் மீடியா
0
தப்லிக் ஜமாத்  தலைமையகம் சார்பில் டெல்லி நிஜாமுதீன் மௌலானா அவர்கள் இன்று விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 




அதில் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் இருக்கும் தப்லிக் ஜமாத் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய  அரசின் சட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது. 

மேலும் நாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு ஆண்டுக்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்டவையாகும் 

நாங்கள் இந்த மாநாடு நடத்தியதிலும், மக்களைத் தங்க வைத்ததிலும் எந்த விதமான சட்டத்தையும் மீறவில்லை. 

பிரதமர் மோடி அவர்கள் கடந்த 22-ம் தேதி ஒரு நாள் ஜனதா ஊரடங்கு அமல்படுத்தியபோதே எங்கள் நிகழ்ச்சிகளை நாங்கள் ரத்து செய்துவிட்டோம். 

அப்போதே பலர் இங்கு வந்து விட்டார்கள்  மறுநாள் புறப்பட்டுச் செல்ல திட்டமிட்டபோது, டெல்லி அரசு 23-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்துவிட்டது

இதனால் பல்வேறு இடங்களில் இருந்து இங்கு வந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல், போக்குவரத்து வசதி இல்லாமல் இங்கேயே தங்கிவிட்டனர். 

சிலர் நாங்கள் போக்குவரத்து வசதிகளைச் செய்து கொள்கிறோம் எனக் கூறி அவர் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டார்கள்

மேலும் இங்கு இருந்தவர்களுக்கு  போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கையும் வழங்கப்பட்டது. 

கடந்த 24-ம் தேதி ஹஸ்ரத் நிஜாமுதீன் காவல் நிலையத்திலிருந்து எங்கள் மையத்தை மூட சம்மன் அனுப்பப்பட்டது. அதற்கு எங்கள் தரப்பில் இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல வாகன அனுமதி வழங்கிட வேண்டும் எனக் கேட்டிருந்தோம்.  ஆனால், இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. என தங்கள் தரப்பு நியாத்தை எடுத்து கூறி அறிக்கை வெளியிட்டுளார்கள்

அறிக்கையை முழுவதுமாக படிக்க





Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback