கொரானாவை விரட்ட காற்றில் மருந்து தெளிக்கின்றார்களா? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சிலர் (செய்தி)
“ஹலோ நீங்கள் இன்று இரவு 10 மணிக்குப் பிறகு நாளை அதிகாலை 5 மணி வரை உங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன் .... கோவிட் -19 கிருமியை கொல்லும் மருந்தை காற்றில் கலந்து தெளிப்பார்கள் !!அதனால் அவரவர் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்
இந்த தகவலை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உங்கள் குடும்பங்கள் அனைவருக்கும் பகிரவும் ...
நன்றி!". (இன்று இரவு முதல்)
என்ற ஒரு செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
இந்த வதந்தி கொரானா வைரஸை விட வேகமாக பரவி வருகின்றது
இந்த வதந்தி பல நாடுகளை கடந்து தற்போது தமிழ்நாட்டில் வந்துள்ளது
இந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தியானது யாரும் நம்பாதீர்கள்
பொய் செய்திகளை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி