நான் முதல்வராக விரும்பவில்லை: கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதே எனது முடிவு..நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அவர்கள்,
சிஸ்டத்தை சரி செய்யாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றது
நான் கூறிய விஷயங்கள் ஊடகங்களில் பலவிதமாக வந்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தற்போது பேட்டி
1995 முதல் நான் அரசியலுக்கு வர உள்ளதாக ஒருபோதும் கூறியதில்லை 2017-ம்
ஆண்டில் தான் கூறினேன். நான் 26 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக கூறி
வருகிறார் என்று கூறுவது தவறு இனிமேல் அது போல் கூறாதீர்கள்
சிஸ்டத்தை சரி செய்யாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றது
எனவே எனது அரசியல் கட்சியில் அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்கள் வகுக்கபட்டுள்ளன!! சிஸ்டம் சரி செய்யாமல் ஆட்சி நடந்தால் நன்றாக இருக்காது
முதல் திட்டம்
கட்சி பதவியை சிலர் தொழிலாக வைத்துள்ளதால் தான் முறைகேடுகள் நடைபெறுகிறது எனவே கட்சியில் பல்வேறு பதவிகளுக்காக தேர்தல் நேரத்தில் தேவையான அளவுக்கு மட்டுமே வைத்துக் கொள்வேன் கட்சி
பதவிகளை தொழிலாகவே பலர் பயன்படுத்தி வருகின்றனர் ,வேலை எதுவும் செய்யாமல்
கட்சி பதவியே தொழிலாக பார்க்கிறார்கள் அவர்களுக்கு பதவி இல்லை தேவையான நபர்கள் மட்டுமே கட்சி
பதவியில் வைத்து கொள்ள போகிறேன்
இரண்டாம் திட்டம்
புதியவர்கள், இளைஞர்கள் கட்சிப் பதவிக்கு வருவதில்லை அரசியல்வாதிகளின் வாரிசுகள்தான் வருகிறார்கள் 60% முதல் 65 சதவீதம் வரை இளைஞர்களுக்கு இடம் ஒதுக்க முடிவு
மூன்றாம் திட்டம்
ஆட்சியில் இருப்பவர்களை கட்சியில் இருப்பவர்கள் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் எனவே நான் முதல்வர் பதவியை நினைத்துக் கூட பார்க்க முடியாது என் ரத்தத்திலேயே இல்லை கட்சிக்கு ஒரு தலைமை- ஆட்சிக்கு ஒரு தலைமை செயல்படுத்துவோம்.ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்தால் அவர்களை கட்சி தலைமை தூக்கி எறியும் சட்டசபைக்கு போய் பேச விரும்பவில்லை, கட்சிக்கு தலைவனாக மட்டுமே இருப்பேன்முதலமைச்சர் பதவியை நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை நான் தமிழகத்தின் முதல்வராக விரும்பவில்லை
Tags: முக்கிய அறிவிப்பு