Breaking News

நடிகர் கமல்ஹாசன் வீட்டில் கொரானா ஸ்டிக்கர் ஒட்டபட்டதா? அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டாரா?உண்மை என்ன

அட்மின் மீடியா
0
நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரது வீட்டின் முன் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியுள்ளது.



மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக அவரது வீட்டு வாசலில் சென்னை மாநகராட்சி அறிவித்தாக நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த தகவல் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி சர்ச்சை எழுந்தது மேலும்  ஆழ்வார்பேட்டை வீட்டில் கமல் இப்போது இல்லை ஏனென்றால் கமல் இதை அலுவலகமாகத்தான் பயன்படுத்தி வருகிறார்.. அது மட்டுமல்ல, தற்சமயம் அவர் ஈசிஆரில் உள்ள வீட்டில்தான் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து  மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்  நடிகர் கமலஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதில் சிறிய தவறு நடந்துவிட்டது , இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது அதனை தொடர்ந்து அவரது வீட்டில் ஒட்டியிருந்த கொரோனா நோட்டீஸை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.


Tags: முக்கிய அறிவிப்பு

Share this