Breaking News

இந்த ஆண்டு ஹஜ் பயனம் ரத்தா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
இந்த ஆண்டு ஹஜ் ரத்து செய்யப்படலாம் என்பதை சவுதி அரசு உறுதிப்படுத்தியுள்ளதுடன், எந்த ஹோட்டல், பயிற்சியாளர் அல்லது டிக்கெட்டிலும் எந்த ஒப்பந்தமும் செய்ய வேண்டாம் என்று அனைத்து ஹஜ் நிறுவனங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது..என ஒரு செய்தியும் அதனுடன் ஒரு வீடியோவையும் பலர் ஷேர் செய்கின்றார்கள் 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி உண்மையில்லை

யாரும்நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


பலரும் ஷேர் செய்யும் வீடியோவில் பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த ஆண்டு ஹஜ் பயனிகளுக்கு அனுமதி இல்லை என ஒரு செய்தி பரவுகின்றதே அதற்க்கு என்ன பதில்  என கேட்டதற்க்கு அவர்  கூறுவது என்னவென்றால்

ஹஜ் நிறுத்தம்  தொடர்பாக இது வரை எந்த முடிவும். எடுக்கப்படவில்லை.
மாற்று முடிவு இருந்தால் பின்னர் அறிவிப்பு செய்யப்படும் என்பதாக செய்தி. இதனை பிரஞ்சில் ஒருவர் மொழி பெயர்ப்பு செய்கிறார்.


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள். யா அல்லாஹ் இந்த ஆண்டு எனக்கு ஹஜ் பயனம் நிறைவேற வழிகாட்டு யா அல்லாஹ் என எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்வோம்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback