Breaking News

புனித காபா ஆலயத்தை பறவைகள் தவாப் செய்யும் காட்சி : உண்மையா?

அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் காரணமாக, மெக்காவில் உள்ள  கஃபா ஆலயத்தை மக்கள் சுற்றுவதை நிருத்திய பிறகு  பறவைகள் தோன்றி புனித ஆலயத்தை சுற்றிக் கொண்டு இருக்கும் அதிசய காட்சி என ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அப்படியானால் உண்மை என்ன?

காபாவில் யாரும் தவாப் செய்யவில்லை என்பது பொய்யான செய்தியாகும் அங்கு வழக்கம் போல் தவாப் செய்து கொண்டு தான் உள்ளார்கள்.

கொரனா வைரஸ் காரணத்தினால் காபாவினை சுற்றி மருந்து அடித்து விட்டார்கள் அப்போது எடுக்கபட்ட புகைபடங்களை சிலர் காபாவில் தவாப் நடக்கவில்லை என பொய்யான செய்தியினை ஷேர் செய்து கொண்டு இருக்கின்றார்கள்

இது குறித்து அட்மின் மீடியா ஏற்கனவே வெளியிட்ட மறுப்பு செய்தியினை படிக்க 


அப்படியானால் அந்த பறவைகள் தவாப் செய்தது பொய்யா என கேட்பவர்களுக்கு அந்த வீடியோ உண்மைதான்.. இது போல் அடிக்கடி அங்கு நிகழும் என்பது தான் உண்மை

ஆனால் அதற்க்கு ஒரு பொய்யான காரணத்தை காட்டி பொய் செய்தியினை பகிராதீர்கள்

ஹஜ் உம்ரா சென்று வருபவர்களுக்கு இது தெரியும் இது போன்று  இரவு நேரங்களில் பறவைகள் காபாவின் மேல் பறக்கும் என்பது

அதாவது காபாவினை பறவைகள் வட்டமிடும் காட்சி மாஷா அல்லாஹ் என கூறலாம்

எனவே பொய்யான காரனம் காட்டி செய்தி ஷேர் செய்யாதீர்கள்


மேலும் மெக்காவில் தற்போது நேரலையில் காண


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback