Breaking News

ஜமாத்துல் உலமா சபை ரஜினியை சந்தித்தது பற்றி விரைவில் விளக்கம் அளிக்கவேண்டும்

அட்மின் மீடியா
5
இன்று CAA, NRC சட்டத்தை எதிர்த்து போராடும் போரட்டம் ஏன் என்று அனைத்து இஸ்லாமியர்கள் சார்பாக ஜமாத்துல் உலமா சபையினர் இன்று நடிகர் திரு.ரஜினி காந்த் அவர்களை சந்தித்து பேசினார்கள் ஏன் சந்தித்தார்கள்


கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் அரசியல் கட்சிகள், முஸ்லிம் மத குருமார்களை தூண்டிவிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறியிருந்தார்.

இந்த கருத்து இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில்.

அதற்க்கான விளக்கம் அவருக்கு ஜமாத்துல் உலமாவின் சார்பில் அன்றே பதில் தரப்பட்டது

இந்த CAA எதிர்ப்பு போராட்ட எதார்த்த நிலவரம் குறித்து அவரை சந்தித்து விளக்க விரும்புவதாக அதில் தெரிவித்திருந்தோம் . அந்தக் கடிதத்தைப் படித்த திரு ரஜினிகாந்த் கடிதம் மிகவும் நாகரீகமாக எழுதப்பட்டிருக்கிறது என்று கூறி சபை நிர்வாகிகளை அவசியம் சந்திக்கிறேன் என்று கூறினார்.

அதனடிப்படையில் இன்று ஜமாஅத்துல் உலமா சபை மாநில நிர்வாகிகள் அவரை சந்தித்தனர். மிகுந்த மரியாதையோடு அனைவரையும் வரவேற்ற அவர் ஜமாத்துல் உலமாவின் கருத்துக்களை கவனமாக கேட்டிருந்தார். சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் இந்தியா முழுக்க சிஐஏ, என்ஆர்சி என்பிஆர் சம்பந்தமாக முஸ்லீம்கள் மற்றும் ஜனநாயக சக்திகளிடம் எழுந்துள்ள அச்சத்தின் நியாயங்களை அவருக்கு விளக்கிச் சொன்னபோது அது சரிதான் அதில் நியாயம் இருக்கிறது என்று அவர் ஒப்புக்கொண்டார்.


அதோடு இந்த அச்சத்தை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என தங்களைப் போன்ற மத குருமார்கள் தீர்மானித்து சொன்னால் நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சம் அகன்று அமைதி ஏற்பட தன்னால் இயன்ற அனைத்தையும் உங்களோடு சேர்ந்து செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என உறுதியளித்தார்.

ஜமாத்துல் உலமா நிர்வாகிகளை சந்திக்க நேரம் ஒதுக்கி அனைத்து கருத்துக்களையும் கவனமாக கேட்டறிந்த திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜமாஅத்துல் உலமா நிர்வாகிகள் நன்றி கூறி விடை பெற்றனர்.

என ஜமாஅத்துல் உலமா அறிக்கை வெளியிட்டுள்ளது.


ஆனாலும் அந்த சந்திப்பு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை பலரும் கூறி விமர்சனங்கள் வைக்கின்றார்கள் 

மேலும்  ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் திரு. ரஜினி அவர்கள் உடனான  சந்திப்பின் நோக்கத்தையும், நடந்த உரையாடல்கள் மற்றும் அவர் அளித்த வாக்குறுதிகளை தெளிவான முறையில் விளக்கி விமர்சனங்களுக்கு முற்று புள்ளி வைக்குமாறு அட்மின் மீடியா கண்ணியத்துடன் கோரிக்கை வைக்கின்றது.

மேலும் சமூக வலைதளங்களில் ஜமாத்துல் உலமா சபை பற்றி  விமர்சிக்கும் சிலருக்கு  ஜமாத்துல் உலமா சபையின்  விளக்கம் வரும் வரை சமூதாயத்தின் கண்ணியத்தை பாதுகாக்க பொறுமை மேற்கொள்ளும் படியும்

மேலும் தற்போதய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு எடுத்ததெற்கெல்லாம் கடும் விமர்சனங்களை வைப்பதை தவிர்க்கும் படியும் சமூக அக்கறையுடன் அட்மின் மீடியா தங்களிடம் கேட்டுகொள்கின்றது

Tags: தமிழக ஷாஹீன்பாக்

Give Us Your Feedback

5 Comments

  1. ரஜினியின் அழைப்பை ஏற்று அவரை சந்திக்க இரண்டு நிபந்தனைகள் விதித்து ஜமாத்துல் உலமா அதிரடி பதிலடி.

    நீங்கள் எங்களை அழைப்பதற்கு முன்பே.... இந்து ராம் உங்களை அழைத்திருக்கறார் அவரை சந்தித்துவிட்டு வாருங்கள் நாங்கள் உங்களை சந்திக்கிறோம்.

    இஸ்லாமிய மதகுருமார்கள் தான் கலவரத்தை தூண்டுகிறார்கள் என்ற அரத்தத்தில் பேசியது மிகப்பெரிய தவறு - தெரியாமல் பேசியிருந்தால் அதற்காக வருத்தமோ தெரிந்தே பேசியிருந்தால் அதற்காக மன்னிப்போ கேட்கப்படுமானால்

    அதன்பின் பொது இடத்தில் நம் சந்தித்திப்பு நிகழும்.

    *#ச்சே_கனவா.....*

    https://www.facebook.com/100000913250972/posts/3699116520128753/

    ReplyDelete
  2. அட்மின் மீடியா...உலமா தலைவர்களிடம் விளக்கம் கேட்கும் நோக்கம் என்ன?

    ஏராளமான மீடியாக்கள் தமிழில் இருக்கும் போது....அவைகளின் வேலை செய்தியை மக்கள் மத்தியில் வைப்பதே தவிர விளக்கம் கோருவதல்ல.

    ஏதோ நடிகர் ரஜ்னி காந்த் தெரிந்தோ தெரியாமலோ CAA, குறித்து புரிதலின்றி பேசி விட்டார்.அவருக்கு அதை தெளிவுபடுத்த உலமாக்கள் முயற்சி செய்து...அதன்படி முஸ்லிம்களின் கருத்தை உலமா தலைவர்கள்...அவருக்கு எத்தி வைத்து வைத்து தம் கடமையை செய்து விட்டனர்.அவ்விளக்கத்தை திரு.ரஜ்னி ஏற்பதும்...மறுப்பதும் அவர் விருப்பம்.


    இதில் அட்மின் மீடியா உள் நுழைந்து என்ன ஆதாயம் எதிர்பார்க்கிறது.அட்மின் மீடியா என்ற பொதுப் பெயரில்...சில ஹராமான தனி இயக்கத்திற்க்காக ..பேசுவதாகவே தெரிகிறது.இது மீடியா தர்மத்திற்கும்...இஸ்லாமிய தர்மத்திற்கும் அழகல்ல.

    செய்தியை கொடுப்பதோடு நின்று கொள்ளுங்கள்.விளக்கம் கேட்கிறேன் என்ற பெயரில் முஸ்லிம் ஒற்றுமையை குலைக்க முயற்சிக்க வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. ஜமாஅத்துல் உலமா அறிக்கை வெளியிட்டுள்ளது.





      ஆனாலும் அந்த சந்திப்பு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை பலரும் கூறி விமர்சனங்கள் வைக்கின்றார்கள்

      மேலும் ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் திரு. ரஜினி அவர்கள் உடனான சந்திப்பின் நோக்கத்தையும், நடந்த உரையாடல்கள் மற்றும் அவர் அளித்த வாக்குறுதிகளை தெளிவான முறையில் விளக்கி விமர்சனங்களுக்கு முற்று புள்ளி வைக்குமாறு அட்மின் மீடியா கண்ணியத்துடன் கோரிக்கை வைக்கின்றது.

      மேலும் சமூக வலைதளங்களில் ஜமாத்துல் உலமா சபை பற்றி விமர்சிக்கும் சிலருக்கு ஜமாத்துல் உலமா

      Delete
    2. Mr syed செய்தியை முழுவதுமாக படியுங்கள்.

      கடைசியில் இந்த வரிகள் உங்கள் கண்களுக்கு தென்படவில்லையா?? இஸ்லாமிய ஒற்றுமைக்கு குந்தகம் விளைய கூடாது என்பதற்காக தான் இதை போட்டுள்ளோம்.

      ////மேலும் சமூக வலைதளங்களில் ஜமாத்துல் உலமா சபை பற்றி விமர்சிக்கும் சிலருக்கு ஜமாத்துல் உலமா சபையின் விளக்கம் வரும் வரை சமூதாயத்தின் கண்ணியத்தை பாதுகாக்க பொறுமை மேற்கொள்ளும் படியும்

      மேலும் தற்போதய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு எடுத்ததெற்கெல்லாம் கடும் விமர்சனங்களை வைப்பதை தவிர்க்கும் படியும் சமூக அக்கறையுடன் அட்மின் மீடியா தங்களிடம் கேட்டுகொள்கின்றது.///

      Delete
  3. ஒன்று நல்லது செய்யனும். இல்லே ஓராமாயிருந்து முயற்சி செய்பவர்களை பார்க்க வேண்டும்.

    உள்ளே சென்று குட்டையை குழப்புவதால் சமுதாய பிளவு நிணசயம். இதுதான் உங்கள் தேவையா?
    Kindly close your message for the Welfare of the community.

    ReplyDelete