Breaking News

இன்று முதல் மளிகைகடை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும்

அட்மின் மீடியா
0
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அத்யாவசிய தேவைகளான  மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன.



ஆனால் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் பல இடங்களில் பொதுமக்கள் அடிக்கடி கடைக்கு சென்று வந்தார்கள் இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் போன்றவை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும், பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback