Breaking News

30 வருடங்களுக்கு முன்பே ஈராக்கை கரோனா வைரஸ் மூலம் தாக்குவேன் என்று அமெரிக்கா மிரட்டியதாக சதாம் உசேன் கூறினாரா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
30 வருடங்களுக்கு முன்பே ஈராக்கை கரோனா வைரஸ் மூலம் தாக்குவேன் என்று அமெரிக்கா மிரட்டியதாக அப்போதே அதிபர் சதாம் உசேன் கூறியதாக ஒரு வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்ரார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

1990 -95 இடைப்பட்ட காலத்தில் ஈராக் மீது அமொரிக்க கூட்டுப்படைகள் போர் தொடுத்த நேரத்தில்

அந்த வீடியோவில் சதாம் ஹுசேன் பேசியதின்  விளக்கம் பாக்தாத்தில் இராணுவத் தலைவர்களுடனான சந்திப்புக்குக் காரணம் , "கடவுள் விரும்பினால்,  எதிரிகளை பின்னால் ஓடச் செய்ய வேண்டுனம், நாங்கள் செய்வோம்" என்றும் கூறப்படுகிறது. 

ஜனாதிபதி தனது இராணுவ ஆலோசகர்களுடன்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அவர் பேசிய வீடியோ 


இது சம்மந்தமாக மறைந்த ஈராக் ஜனாதிபதியின் மகள் ராகத் சதாம் ஹுசைன் அந்த வீடியோவின் உண்மையை வெளிப்படுத்தினார், அந்த வீடியோ எடிட் செய்யபட்டது  என்பதையும், இந்த குரல் அவரது தந்தையின் குரல் அல்ல என்பதையும் உறுதிப்படுத்தினார்


அட்மின் மீடியா ஆதாரம் 1

https://factuel.afp.com/ar/Edited%20video%20of%20Saddam%20Husein



அட்மின் மீடியா ஆதாரம் 2


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback