சானிட்டைசர் ரூபாய் 100 க்கு மேல் விற்க்க கூடாது :மத்திய அரசு நிர்ணயம்
அட்மின் மீடியா
0
சானிட்டைசருக்கு அதிகபட்ச சில்லறை விலையை அரசு நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் குறித்த அச்சம் நிலவி வருகிறது. கைகளை சானிட்டைசர் கொண்டு கழுவுவதை ஊடகங்கள் வழியாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது முகமூடி மற்றும் சானிட்டைசர்களின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் எளிதில் வாங்கிபயன்படுத்த முடியாமல் அவதிபட்டுவருகின்றார்கள்
இந்நிலையில் மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வான் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
கொரோனா வைரசில் இருந்து மக்களை காக்கும் விதமாக சானிட்டைசர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் முகமூடி மற்றும் சானிட்டைசர்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்ச விலை இதன்படி 200மில்லி அளவு கொண்ட சானிட்டைசர் பாட்டிலை அதிகபட்ச விலையாக ரூ.100 வரையில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
மேலும் முகமூடிகளின் விலையை அதிகபட்சமாக ரூ.10 வரையிலும் விற்பனை செய்ய வேண்டும்.
வரும் ஜூன் மாதம் வரையில் இந்த விலையிலேயே விற்பனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக மத்திய அரசு முகமூடி, சானிட்டைசர் உட்பட தற்போதைய சூழ்நிலைக்கு தேவையான பொருட்களை அத்தியாவசிய பட்டியலில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
source:
Tags: முக்கிய அறிவிப்பு