Breaking News

ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 1000 ரூபாய் வழங்கப்படும்

அட்மின் மீடியா
0
குடும்ப அட்டைதாரா்களுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.




குடும்ப அட்டைதாரா்களுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தலா ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், ஏப்ரல் மாதத்துக்கான அனைத்து பொருள்களும் இலவசமாக வழங்கப்பட உள்ளன என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ரேஷன் கடைகளுக்கு மக்கள் வருவதை கட்டுப்படுத்த,  தெரு வாரியாக டோக்கன் வழங்கப்படும் என்றும், யார் யாருக்கு நிவாரணம் கிடைக்கும் என்பது ரேஷன் கடைகளில்  முன்கூட்டியே விளம்பரம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2 ஆம் தேதியில் இருந்து இந்த பணிகள் தொடங்க உள்ளதுடன், ரொக்கப்பணம் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்படும். 

வாகன வசதி உள்ள ஊர்களில் வீடு வீடாகச் சென்று தொகை வழங்கலாம் என்றும், அதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரிசையில் நிற்பவர்களை ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்கச் செய்ய வேண்டும் என்றும், முதியோர், மாற்றுத் திறனாளிகள் வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண உதவிகளை உரிய முறையில் விநியோகிக்க வேண்டிய பொறுப்பு மாவட்ட ஆட்சியாளர்களை சாரும் என்றும், சென்னையில் உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் இந்த பணியை மேற்கொள்வார் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.









Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback