டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் அவர்கள் பஞ்சாப் நீதிமன்றத்திற்க்கு இடமாற்றாம்
அட்மின் மீடியா
0
டெல்லி வன்முறை வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்
கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி ஹரிஷ் மாண்டர் என்பவர் தாக்கல் செய்த மனுவைத்தான் நேற்று நீதிபதி முரளிதர் அவர்கள் விசாரித்தார்.
ஆனால் டெல்லி உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான டிஎன் படேல், சிஎஸ் சிஸ்டானி ஆகியோர் இல்லாத காரணத்தால் , நீதிபதி முரளிதர் மூன்றாவது நீதிபதியாக அந்த வழக்கை விசாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
நேற்றைய விசாரணையின் போது அவர் எழுப்பிய சரமாரி கேள்விகள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விசாரணையின்போது, டெல்லி காவல்துறை மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோரை நோக்கி கடுமையான கேள்விகளை எழுப்பினார் முரளிதர். அவரின் இந்த செயல்பாடு வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், வழக்கை அவர் தொடர்ந்து விசாரிக்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது மேலும்பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யபட்டுள்ளார்