Breaking News

தமிழக மலைபகுதியில் டிரெக்கிங் செல்ல தடை: வனத்துறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0
கோடைகாலம்  நெருங்கிவரும் நிலையில் மலைப்பகுதிகளில் காட்டுத்தீ பரவும் அபாயம் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரெக்கிங் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் மலையேற்றப் பயிற்சிக்கான தனி பாதைகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் ஆண்டு முழுவதும் வனத்துறையின் அனுமதியுடன் மலையேற்ற பயிற்சியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த  மலையேற்ற சுற்றுலாவில் பலர் சுற்றுலா செல்கின்றார்கள்

மேலும் கடந்த 2018ம் ஆண்டு, தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்ற பயிற்சியில் காட்டுத்தீயில் சிக்கி இருபதுக்கும் மேற்பட்டோர் இறந்தனர். 

இந்த அசம்பாவிதத்தால் குரங்கணியில் மலையேற்றக் குழுவினருக்கு வனத்துறையினர் அதிரடியாக தடை விதித்தனர்.


தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மலைப்பகுதிகளில் பரவலாக காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. மேலும், மலைப்பகுதிகளில் மலையேற்றப் பயிற்சிக்கு செல்வதற்கு தடை விதித்தும் வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback