Breaking News

டெல்லி கலவரத்தில் பலி 27 ஆக உயர்வு

அட்மின் மீடியா
0

டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகின்றது
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, தலைநகர் டெல்லியின் மாஜ்பூர்,ஜாப்ராபாத் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில், சிஏஏ ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது.

வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளன. இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன


Give Us Your Feedback