Breaking News

20,000 கொரோனா வைரஸ் நோயாளிகளைக் கொல்ல சீனா நீதிமன்றம் உத்தரவிட்டதா?

அட்மின் மீடியா
0
20,000 கொரோனா வைரஸ் நோயாளிகளைக் கொல்ல சீனா நீதிமன்றம் உத்தரவிட்டதா? 
மேற்கொண்டு வைரஸ் பரவுவதை தடுக்க 20,000 கொரோனா வைரஸ் நோயாளிகளை கொல்ல அனுமதிக்க வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளது சீன அரசு 

இந்த நோய் தீவிரமாக தொற்றியவர்கள் முற்றிலும் செயல் இழந்துவிடுவதாகவும், இவர்கள் மரணம் அடைவதில் தாமதம் ஏற்படுவதால் நோய் அதிவேகமாக பரவுவதால் இவர்களை கருணை கொலை செய்யலாம் என அரசு கருதுவதாகவும், சீன மக்கள் உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு அரசு மனு அளித்துள்ளது.

என்று  ஒரு செய்தி சமுகவளைதளத்தில் பரவுகின்றது

உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

இந்த செய்தியை   முதன் முதலில் பொய்யாக பரப்பியதே இந்த வளைதளம் தான்


பிப்ரவரி 5, 2020 அன்று, ஏபி-டிசி (சிட்டி நியூஸ்) என்ற வலைத்தளதில் இருந்து வரும் செய்திகள் உண்மை இல்லை..

இதற்கு முன்பு இந்த வளைதளம் பல பொய்யான செய்திகளை வெளியிட்டு உள்ளது 

இந்த வலைத்தளம் குப்பை செய்திகளால் நிறைந்துள்ளது.

உதாரணமாக, ஜூலை 2010 கட்டுரை
http://archive.ph/d1rJ8
என்ற தளத்தில் முகப்புப்பக்கத்தில் இன்னும் இடம்பெற்றுள்ளது), “BREAKING: நியூயார்க் ஜயண்ட்ஸ் பயிற்சியாளர் பாட் ஷர்முர் இறந்துவிட்டார்” என்ற தலைப்பைக் கொண்டுள்ளது. 

ஆனால் ஷர்முர் 2010 இல் உண்மையில் இறக்கவில்லை. , 

அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் ஜனவரி 2020 இல் டென்வர் ப்ரோன்கோஸின்  ஒருங்கிணைப்பாளராக பணியமர்த்தப்பட்டார்.

அட்மின் மீடியா ஆதாரம் 


சீன உச்ச நீதிமன்றத்தில் இந்த  வழக்கு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்த வதந்தியின் ஒரே ஆதாரம் ஏபி-டிசி. இந்த தளம் மட்டுமே  இருப்பினும், இந்த வலைத்தளம் அதன் கூற்றை ஆதரிக்க எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. 

இந்த வலைத்தளம் தவறான தகவல்களை பரப்பும் ஒரு  வளைதளம்.

இதை நம்பி இங்கு உள்ள சில ஊடகங்களும் தவறான செய்தியை உண்மை என பொய்யாக பரப்பி வருகின்றனர்

அட்மின் மீடியா ஆதாரம்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback