Breaking News

NRC க்கு ஆதரவாக போன் செய்கின்றார்காளா ? இன்றுமதியம் 2 மணி முதல் 3 மணி வரை போனை ஆப் செய்யனுமா?

அட்மின் மீடியா
4
இன்று ஜனவரி 22 ஆம் தேதி மதியம் 2 மணி முதல்  3 மணி வரைக்கும்  உங்களின் மொபைல் போனை ஸ்விட் ஆப் செய்து வைக்கவும் ஏன் என்றால் என் ஆர் சி சம்மந்தமாக ஒரு கணக்கெடுப்பு எடுக்கின்றார்கள் இந்த நேரத்தில் எத்தனை பேர்  எதிர்ப்புக்கு  ஆதரவு தருகின்றார் என உள்ளதால் தங்கள் மொபைலை நெட் ஆப் செய்வது மட்டும் அல்லாமல்  கட்டாயம் மொபைலையும் ஸ்விட்ச் ஆப்  செய்யவும் உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் இந்த செய்தியை அனுப்பவும்
என்று பேசி ஒரு ஆடியோ சமுகவலைதளத்தில் பலரும் ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

சமீபகாலமாக என்.ஆர்.சி, சி.ஏ.ஏ  சம்மந்தமாக பல பொய்யான செய்திகள் வருகின்றது

அதில் 

இந்த வெப்சைட்டில் NRC க்கு எதிராக வாக்களியுங்கள் என்று 
அது எல்லாம் சும்மா கண்துடைப்பு. அதனால் எந்த பிரஜோஜனமும் இல்லை

இந்த எண்னில் NRC க்கு எதிராக வாக்களியுங்கள் என்று 
அதுவும் சும்மா தான் இது வரை உலக வரலாற்றில் நீதிமன்றத்தில் இது போல் ஒரு ஆதாரத்தை எடுத்து கொண்டுள்ளார்களா?

அந்த வரிசையில் இதுவும் ஒன்று

அடிப்படையாக மொபைல் நம்பரில் இருந்து  கணக்கெடுக்கும் முறை என்பது   ஒரு குறிப்பிட்ட நம்பருக்கு மிஸ்டு கால் அல்லது எஸ்.எம்.எஸ் அனுப்பவதின் மூலம் மட்டுமே  எடுக்க முடியும்.

அதுவும் நாம்தான் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யமுடியும்.

மேலும் சற்று சிந்திக்கவேண்டும்

நீதிமன்றத்தில் இது போல் போன் செய்து இத்தனை பேர் ஆதரவு என்று ஒரு ஆதாரத்தை கொடுக்கமுடியாது

அந்த ஆதாரத்தை நீதிமன்றமும் எடுத்து ஆதாரமாக எடுத்து கொள்ளாது

மேலும் இந்தியா முழுவதும் பல கோடி மக்களின் வாழ்வாதார பிரச்சனையை 1 மணி நேர போன் காலில் எத்தனை பேர் ஆதரவு ,எத்தனை பேர் எதிர்ப்பு என்று பார்த்தா தீர்ப்பளிப்பார்கள்.

மேலும் ஒரு மணி நேரத்தில் இத்தனை கோடி மக்களையும் தொடர்பு கொள்ள முடியுமா என்று சற்று சிந்திக்க வேண்டும்

ஆகவே இந்த செய்தி பொய்யானது அதை பற்றி யாரும் அச்சம் அடைய வேண்டாம் 

மேற்கொண்டும் யாருக்கும் அனுப்பவேண்டாம் என அட்மின் மிடியா சார்பாக கேட்டுகொள்கின்றோம்.

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

4 Comments