ஈராக்கை விட்டு தப்பி ஓடுகிற அமெரிக்கப் படைகள் வீடியோ உண்மையா?
அட்மின் மீடியா
0
பாவம் அமெரிக்காவின் நிலைமையை பாருங்கள் ஈராக்கை விட்டு தப்பி ஓடுகிற அமெரிக்கப் படைகள் கல்வீசி தாக்கி கிராம பொதுமக்கள் ஈரான் ராணுவ தளபதியை நேருக்கு நேர் சந்தித்து எழுதமுடியாமல் ரகசியமாக கோழைத்தனமாக யாத்திரைக்கு வந்த ஈரான் ராணுவ தளபதி புரட்சி வீரன் ஜெனரல் காசிம் சுலைமான் அவர்களே படுகொலை செய்த அமெரிக்கா ராணுவம் ஈராக் மக்கள் கடும் கோபம் கொண்டு அமெரிக்க இராணுவத்தை வெளியேற்றும் காட்சி
உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
அந்த சம்பவம் கடந்த2019 ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது
ரஷ்ய-துருக்கிய உடன்படிக்கையின் கீழ் குர்திஷ் படைகள் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டதையடுத்து, ரஷ்ய மற்றும் துருக்கிய படைகள் வடக்கு சிரியாவின் ஒரு பகுதியில் கோபானி அருகே ரோந்து சென்று வருகின்றன.
அந்த ரஷ்ய-துருக்கிய ரோந்துப்பணியின் கான்வாய் வாகனங்களின் பார்த்த போது கோபமடைந்த குர்திஷ் மக்கள் கற்களால் தூக்கி எறிந்து தாக்கும் அந்த வீடியோவை
ஜனவரி 2020 அன்று ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமான் அவர்களே படுகொலைக்கு எதிப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா ராணுவம் ஈராக் மக்கள் கடும் கோபம் கொண்டு வெளியேற்றும் காட்சி என்று பொய்யாக பரப்புகின்றனர்
அட்மின் மிடியா ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி