Breaking News

மலேசியாவிலிருந்து -23000 - இந்தியர்களை அதிரடியாக, வெளியேற்றுகிறது.. ? உண்மையா?

அட்மின் மீடியா
0
NRC -CAA - உலக நாடுகளின் எதிரொலி .!.?..

 மலேசிய அரசு:- மலேசியாவிலிருந்து -23000 - இந்தியர்களை அதிரடியாக,  வெளியேற்றுகிறது.. என்ற ஒரு செய்தியினை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள் 

அந்த செய்தி உண்மையா என பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தியின் உண்மை என்ன


மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள  22,964 இந்தியர்களை வெளியேற்ற அந்நாடு தயாராகி வருகிறது. 

மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை தங்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப கடந்த ஆகஸ்டு மாதம் மலேசிய அரசு அறிவித்தது.

அதாவது தங்கள் விசா காலம் முடிந்தும் பணியில் இருப்பவர்கள் பலர் மலேசியாவில் உள்ளார்கள் என்றும் அவர்கள் உடனடியாக மலேசியாவில் இருந்து அவர்களின் சொந்த நாட்டிற்க்கு திருப்பி அனுப்ப தற்போது மலேசிய அரசு முடிவு செய்துள்ளது

இதனையடுத்து, ஏராளமானோர் மலேசிய குடியுரிமை அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர்.

மலேசியாவில் கல்வி-தொழில் போன்றவற்றிற்காக சட்டவிரோதமான அவர்களை தண்டிப்பதை கைவிட்டு அவரவர் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல கடந்த ஆகஸ்ட் மாதம் அந்நாட்டு அறிவித்திருந்தது .

அதன்படி, டிசம்பர் 31-க்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தங்கள் குடி ஆவணங்களை குடியுரிமை அலுவலகத்தில் காண்பித்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படாது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துதரப்படும் என அது தெரிவித்திருந்தது.

இந்த அறிவிப்பை பலர் ஆரம்பக்கட்டத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை தற்போது கடைசி நேரம் நெருங்கியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் மலேசியாவில் புத்ராஜெயா நகரில் இருக்கும் குடியுரிமை அலுவலகத்தில் திரண்டு வருகின்றனர் .

தாங்களாகவே முன்வந்து சொந்த நாட்டிற்கு செல்வதற்காக தங்கள் ஆவணங்களை அவர்கள் தாக்கல் செய்து வருகின்றனர் .

இதில் சுமார் 53 ஆயிரத்து 328 பேர் இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள் என்றும் 38 ஆயிரத்து 534 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப தங்களது ஆவணங்களை சமர்ப்பித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதில், சுமார் 22 ,964 ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து நான்கு பேர் இந்தியர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback