பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வுகள்: தட்கலில் விண்ணப்பிக்கலாம்.
அட்மின் மீடியா
0
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வுகள்: தட்கலில் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வுக்கு தோ்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறிய தனித் தோ்வா்கள், ‘தட்கல்’ முறையில் ஜனவரி 2ம் தேதி மற்றும் 3 ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வுகளை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தோ்ச்சி பெறாதவா்கள் மாா்ச் 2020, ஜூன் 2020 பருவங்களில் நடைபெறும் பொதுத்தோ்வுகளைப் பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம்.
கடந்த ஆண்டு நேரடித் தனித்தோ்வராக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு தோ்வெழுதி தோ்ச்சிபெறாத தோ்வா்கள் அனைவரும் மீண்டும் எழுதுவதற்கு சோ்த்து விண்ணப்பிக்கலாம்.
தனித்தோ்வா்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுத் தோ்வுத் துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் மாவட்டத்தில் உள்ள அரசுத் தோ்வுத் துறை சேவை மையத்திற்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தோ்வுத் துறை சேவை மையங்களின் விவரத்தை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தனித்தோ்வா்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும்.
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தனித்தோ்வா்களுக்கான அறிவுரைகளின்படி வயது வரம்பு, கல்வித் தகுதி, பாடங்கள் வகைப்பாடு அறிந்து அதன்படி விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
http://www.dge.tn.gov.in/
Tags: முக்கிய செய்தி