Breaking News

NPR பட்டியலில் இஸ்லாமிய பண்டிகைகள் ஏன் இல்லை? உண்மை என்ன

அட்மின் மீடியா
5
தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) தொடர்பான விதிகள் கையேட்டின் 32 ஆம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் நாட்டின் முக்கிய பண்டிகை / விடுமுறை தினங்கள் பட்டியல்.
இதில், இஸ்லாமியர்களின் நோன்புப் பெருநாள், ஹஜ் பெருநாள் இரண்டு பண்டிகைகள் இல்லை.

என்ற ஒரு  செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இருக்கின்றார்கள் 

உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

சந்திரனின் இயக்கதினை கணக்கிட்டு உருவாக்கப் பெற்றுள்ள சந்திர நாட்காட்டி - உதாரணம்: இசுலாமிய நாட்காட்டி

இந்த வகை நாள்காட்டியில்  சந்திரனின் வளர் பிறை, தேய் பிறை அடிப்படையில் கடந்த வருடம் வரும் பண்டிகை அடுத்த வருடம் அதே கிழமையில், அதே தேதியில் வரும் என்று  சொல்ல முடியாது, சில நாட்கள் வித்தியாசம் இருக்கும்

உதாரணமாக. ஒருவர் ஜுன் 25ம் தேதி ரம்ஜான் அன்று  பிறந்தார் என்றால் அவரின் பிறந்தநாள் சூரியனை அடிப்படையாக கொண்ட நாள்காட்டியில் அடுத்த ஆண்டும் அதே தேதியில் வரும் ஆனால் இஸ்லாமிய நாட்காட்டியில் அன்று ரம்ஜான் பண்டிகையாக இருக்காது சந்திரனை அடிப்படைய கொண்ட நாள் காட்டியில் சந்திரனின் சுழுற்ச்சி என்பது அதிகப்படியாக 30 நாட்கள் மட்டுமே அதன் பிறகு புதிய நாளாக கணக்கிடப்படும்

சூரியனின் இயக்கத்தினை கணக்கிட்டு உருவாக்கப்படும் சூரிய நாட்காட்டி - உதாரணம்: ஈரானிய நாட்காட்டி

சூரியனை அடிப்படையாக கொண்டதால் வருடத்தின் 365 இந்த வகை நாள்காட்டியில் ஒரு பண்டிகை என்றால் அடுத்த வருடமும் அதே தேதியில் தான் வரும், அதில் கூட கிழமை மாறுபடும்

ஒரு வருடம் என்பது சராசரியாக பூமி ஒரு முறை சூரியனை சுற்றிவர 365 நாட்களும் 5 மணித்தியாலங்களும் 48 நிமிடங்களும் 46 வினாடிகளும் கொண்ட கால அளவை எடுத்துக் கொள்கிறது.

ஆனால் 365 நாட்கள் என்ற முழு நாளை மட்டுமே வருடமாக கணக்கிடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மீதமிருக்கும் 5 மணி 48 நிமிட 46 வினாடிகளை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரி 29 என்று ஒரு நாளாக இணைத்து கணக்கிடப்படுகிறது.

இவ்வாறு 365 நாள் கொண்ட வருடங்களில். இந்த ஒரு நாள் கூடும் போது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 366 நாளக கொண்டு. அந்த வருடம் லீப் வருடமாக கணக்கிடப்படுகிறது.

சூரியன் மற்றும் சந்திரன் இரண்டின் இயக்கத்தினையையும் கணக்கிட்டு உருவாக்கப்பெற்றுள்ள சூரியசந்திர நாட்காட்டி - உதாரணம் இந்து நாட்காட்டி

இஸ்லாமியர்கள் ஏன் மற்ற நாட்காட்டிகளை பின்பற்றுவதில்லை
லீப் வருடம் பிப்ரவரி 29அன்று  ஒருவர் பிறந்தால் அவர் நிலை......


NPR படிவத்தை பூர்த்தி செய்பவர்களின் அலுவக பயன்பாட்டிற்கு இந்த வழிகாட்டும் கையேடு கொடுக்கப்பட்டுள்ளது; பொதுமக்கள் பார்வைக்கு அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆம்!  NPR கையேட்டின் இணைப்பு 5-இல் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இஸ்லாமியப் பண்டிகைகள் இல்லை. 

அதற்கான காரணத்தை தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், அந்த இணைப்பு எதற்கு கொடுக்கப்படுள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். 

கையேட்டின் பக்கம் 16-இல் இவ்வாறாக உள்ளது:

C. Only year of birth is known: In such situations follow the step-wise approach stated below: 

i. Record the year of birth. 
If the informant tells only the year of birth but is not sure about the month of birth, ask whether the birth was before the rainy season or not. If the birth was before the rainy reason, you may further ask whether the birth was in the month during which some important festivals like New Year’s Day, Guru Gobind Singh Jayanti, Makara Sankranti, Pongal, Republic Day, Basant Panchami, Maharishi Dayanand SaraswatiJayanti, Maha Shivratri, Holi, Gudi Padwa, Ramnavmi, Vaisakhi, Bihu, Mahabir Jayanti, Good Friday Budh Purnima are celebrated and estimate the month of birth. Similarly, if the birth was during or after the rainy reason, you may probe and estimate the month of birth by asking whether the birth was in the month during which some important festivals like, Nagapanchami, Janamashtmi, Raksha Bandhan, Independence Day, Ganesh Chaturthi, Onam, Dussehra, Gandhi Jayanti, Diwali, Bhai Duj, Maharishi Valmiki Jayanti, Chhath Puja, Guru Nanak Jayanti, Ayyappa Festival, Christmas festival are celebrated. For your convenience, a list of important Festivals and corresponding Gregorian months in which they fall is given at Annex V.

அதாவது, ஒருவரின் பிறந்த ஆண்டு மட்டுமே தெரியும் எனும்போது அவரிடம் மழைக்காலத்திற்கு முன்பு பிறந்தாரா? அல்லது பின்பு பிறந்தாரா? என கேட்க வேண்டும். பின்னர் அவர் பிறந்த மாதத்தில் கொண்டாடப்பட்ட முக்கிய பண்டிகையை கேட்டு ஆங்கில மாதத்தை பூர்த்தி செய்யலாம். அதற்கு வசதியாக மட்டுமே ஒவ்வொரு ஆங்கில/கிரிகோரியன் மாதத்திலும் கொண்டாடப்படும் பண்டிகைகள் இணைப்பு 5-இல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஏன் இஸ்லாமிய பண்டிகைகள் கொடுக்கப்படவில்லை? 

இஸ்லாமிய பண்டிகைகள் பிறையைக் கொண்டு கணக்கிடப்படும்  ஹிஜ்ரி மாதங்களில் கொண்டாடப்படுகின்றன.

ஆதலால் ஒவ்வொரு கிரிகோரியன் ஆண்டும், ஒரு குறிப்பிட்ட இஸ்லாமிய பண்டிகையின் தேதி சில நாட்கள் குறைந்துக் கொண்டே இருக்கும். 

உதாரணமாக ரம்ஜான் பண்டிகை 1970-இல் ஒரு  ஆங்கில/கிரிகோரியன் மாதத்திலும், 1976-இல் வேறொரு மாதத்திலும் வந்திருக்கும்.

ஆக இதை வைத்து ஒருவர் பிறந்த ஆங்கில மாதத்தை கண்டறிவது கடினம்.

இல்லையெனில் கடந்த 100ஆண்டுகளில் இஸ்லாமிய பண்டிகைகள் எந்தெந்த ஆங்கில மாதங்களில் வந்தன என்கிற பெரியப் பட்டியலைக் கொடுக்க வேண்டும். ஆகவே தான் இஸ்லாமிய பண்டிகைகள் இணைப்பு 5-இல் சேர்க்கப்படவில்லை என்பது 

அதே போல் 2011ம் வருடம் தேசிய மக்கள் பதிவேடிலும் இஸ்லாமிய பண்டிகை சேர்க்கவில்லை. இஸ்லாமிய பண்டிக்கை என்பது சுழற்சி முறையில் வரும் என்ற காரணத்தால் சேர்க்காமல் விடுபட்டிருக்கலாம்.

அட்மின் மீடியா ஆதாரம்

https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF

http://censusindia.gov.in/2011-Common/NprManuals.html


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

5 Comments

  1. இதெல்லாம் காரணமாக எடுத்துக் கொள்ள முடியாது... தேதியும் கிழமையும் குறிப்பிடாமல் முஸ்லிம்கள் பண்டிகைகளை மட்டுமே குறிப்பிட்டிருக்கலாமே...முஸ்லிம்களை அழிக்க வேண்டுமென நினைப்பவர்கள் முதலில் அவர்களின் அடையாளங்களை அழிப்பான்கள். உங்களுடைய அடித்தளமே இல்லை.. உங்களுக்கு இங்கு இடமில்லை என்று சொந்த மண்ணிலே அடிமைகளாக அகதிகளாக ஆக்கப்படுவார்கள்... இதுதான் உண்மை

    ReplyDelete
    Replies
    1. மிக சரியாக சொன்னிங்கா
      Admin media sila visayangalai avargaluku thagantha maathiri pesum.

      Vannaram pettaila muthuyor irranthathukku police karanam illendu sonnathu migaperiya thavaru. Oru islamiya pen kurrukiragiranga police arjagam thanga mudiyalendu.
      Policeku thunai pokum arasai kandithu pathiva poda solluga parpom.

      Delete
  2. Enna irunthalum epdi ithu varai iruko apdi irukrathu than better illaina apdi oru pandigai illamale aakiruvanga

    ReplyDelete
  3. Eid celebrations may come on winter and summer also . So we cannot judge the month with arrabian calendar.

    ReplyDelete