பிரபல பாடகி ஜெனிபர் அல் குரான் ஓதுவதை கேளுங்கள்
அட்மின் மீடியா
0
பிரபல அமெரிக்க பாடகி ஜெனிஃபர் அல்குர்ஆன் சூரத்துல் பகராவின் கடைசி அத்தியாயத்தை அழகாக இனிமையாக ஓதுவது கேளுங்கள் கேட்டால் திரும்பத் திரும்ப கேட்பதற்கு தூண்டும் என்று பலரும் ஒரு செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி உண்மைதான்
அமெரிக்க பாடகர் ஜெனிபர் இசைக்கலைஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர் மற்றும் கிளாசிக்கல் பாடகியாக தனது கலை வாழ்க்கையைத் தொடங்கினார்.
ஜெனிபர் குர்ஆனிய வசனங்களை குறைபாடற்ற முறையில் ஓதினார்
2014 ல் இஸ்லாத்திற்க்கு வந்து அன்று தலைப்பு செய்திகளை உருவாக்கிய
அமெரிக்க பாடகர் ஜெனிபர் புனித குர்ஆனின் சில வசனங்களை ஓதி இன்று சமுகவளைதளத்தில் வலம் வருகிறார்
அரபு கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக ஷார்ஜா பரிசுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார், மேலும் அமெரிக்காவிற்கும் மத்திய கிழக்கிற்கும் இடையில் தனது ஆழ்ந்த இசை அன்பின் மூலம் ஒரு பாலமாக பணியாற்ற தொடர்ந்து முயன்று வருகிறார்.
பாஸ்டனைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் லாங்கி ஸ்கூல் ஆஃப் மியூசிக் மற்றும் வால்நட் ஹில் ஸ்கூல் ஃபார் ஆர்ட்ஸில் படித்தார்.
அவருடைய வீடியோவை காண
Tags: முக்கிய செய்தி