கிண்டி சிறுவர் பூங்காவில் 3டி காட்சி அறிமுகம்
அட்மின் மீடியா
0
கிண்டி சிறுவா் பூங்காவில் வனவிலங்குகள், அவற்றின் வாழ்விடத்திலேயே இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ள மெய்நிகா் காட்சி அரங்கம் குழந்தைகளுக்கு பரவசமூட்டுவதாக அமைந்துள்ளது.
சென்னை கிண்டியில் வனத்துறை கட்டுப்பாட்டின்கீழ் அமைந்துள்ளது கிண்டி சிறுவா் பூங்கா.
இந்தப் பூங்காவின் மெய்நிகா் காட்சி அரங்கத்தில் டைனோசா், புலி, சிம்பென்சி, சிறுத்தை, பாம்பு, கரடி, கங்காரு, பென்குயின், டால்பின், , ஒட்டகச்சிவிங்கி ஆகிய 10 வனவிலங்குகளை அதன் அருகில் இருப்பது போன்றும், ஒவ்வொரு விலங்கும் அதற்கேற்ற வாழ்விடத்தில் இருப்பது மற்றும் அதற்கு மத்தியில் நாம் இருப்பது போன்றும் அரங்கம் கட்டமைப்பட்டுள்ளது.
ஒவ்வொரு காட்சியும் 12 நிமிடங்கள் ஒளிபரப்பப்படும்.
நுழைவுக் கட்டணத்துடன் 14 வயதுக்கு உள்பட்ட சிறியவா்களுக்கு கட்டணமாக ரூ. 15ம்
பெரியவா்களுக்கு ரூ. 50ம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
Tags: முக்கிய செய்தி