Breaking News

உச்சநீதிமன்றத்தில் 1 லட்சம் பேர் வழக்கு தாக்கல் செய்தால் குடியுரிமை சட்டம் கேன்சல் செய்யபடுமா? உண்மை என்ன

அட்மின் மீடியா
2
CAA க்கு எதிராக 1லட்சம் மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் நிறைவேற்றபட்ட CAA ரத்து செய்யப்படும்.என ஒரு வழக்கறிஞர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பலரும் ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

இப்படி எல்லாம் ஒரு சட்டத்தை தள்ளுபடி செய்ய முடியாது. மேலும் இதை செய்ய நடைமுறை சாத்தியம் குறைவு. 

இப்படி நிறைய வழக்குகள் தாக்கல் செய்வதை நீதிமன்றம் நினைத்தால் தடை செய்யவும் முடியும். இதற்கு முன்னர் வந்த எல்லா சட்டங்களையும் இப்படி ரத்து செய்திருக்கலாமே. 

இந்தியா முழுமைக்குமான சட்டங்களை இயற்றவும், வாபஸ் பெறவும் நாடாளுமன்றம் மட்டுமே செய்ய முடியும். 

நீதிமன்றம் அந்த சட்டங்கள் அரசியலமைப்பு சாசன விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை கண்காணிக்கலாம், அரசியல் சாசன சட்டத்தை மீறி இருந்தால் ரத்து செய்ய ஆணையிடலாம்.

சமூக வலைத்தளங்களில் வரும் எல்லா தகவல்களையும் ஆராயாமல் பரப்ப வேண்டாம் பொய்யான செய்தியினை ஷேர் செய்யவும் வேண்டாம்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

2 Comments

  1. அட்மின் மீடியா வழக்கறிஞரா?

    ReplyDelete
    Replies
    1. வழக்கறிஞரும் இருக்காங்க

      Delete