ஜூன் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்
அட்மின் மீடியா
0
அடுத்த ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உணவுத்துறை அமைச்சர் அறிவிப்பு
2020ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். இத்திட்டம் அமலுக்கு வந்தால், நாட்டிலுள்ள எந்த ரேஷன் கடையிலும் தங்களுக்கு உரிய உணவு பொருட்களை பெறலாம். சொந்த மாநிலத்தை விட்டு இடம் பெயர்ந்து வேலை பார்க்கும் தொழிலாளர்கள், தினக்கூலிகள் ஆகியோருக்கு இந்த திட்டம் உதவும். அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் அல்லது ஆதார் மூலம் அடையாளம் கண்டறிந்து பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு ரேஷன் கடைகளும் ஆன்லைன் மூலம் இணைக்கப்படும்.
Tags: முக்கிய செய்தி