இப்பதான் நிம்மதி மகா புயலால் தமிழகத்திற்க்கு பாதிப்பு இல்லை
அட்மின் மீடியா
0
அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த மகா புயல் தமிழகத்தை விட்டு விலகி லட்சத்தீவுகளையும் தாண்டி நகர்ந்து செல்வதால், தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி அதன்பின்பு வலுப்பெற்று ‘மகா’ புயலாக மாறி கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது
தற்போது கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேற்கு வட மேற்கு திசையில் 390 கிலோ மீட்டர் தொலைவிலும், லட்சத்தீவு பகுதியில் அம்மினி தீவில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவிலும் வடக்கு வடமேற்கு திசையில் உள்ளது.
மகா புயல் தமிழகத்தை விட்டு விலகி செல்வதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கனமழைக்கு வாய்ப்பு இல்லை.
மேலும் வருகிற 4-ந் தேதி வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags: முக்கிய செய்தி